காலை உணவு என்பது மிகவும் முக்கியமானது என்பதை நாம் அறிவோம். தினமும் காலை ஆரோக்கியமாக சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் இடர்பாடுகள் குறையும்.
ஆனால் காலை உணவிற்காக நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் ஒட்டுமொத்தமாக தவறான தேர்வாகி போவது உங்களுக்கு தெரியுமா? ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் நீங்கள் நோயாளிகள் ஆகலாம். அதனால் அவைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? இதோ காலையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் விவரங்கள் கீழ்வருமாறு…
சர்க்கரை கலந்த தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகள்
சில தானியங்கள் முழுவதும் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையால் நிறைந்திருக்கும். அவைகளை உட்கொள்ளும் போது, உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து பின் கீழிறங்கும். நாளின் தொடக்கத்திலேயே உங்கள் ஆற்றல் திறனை அடி வாங்க செய்து விடாதீர்கள். அதனால் இவ்வகை தானியங்கள் மற்றும் பேக்கரி உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மாறாக, அதிக நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அடங்கியுள்ள தானியங்களை உண்ணுங்கள். ஆளிவிதை அல்லது வால்நட்ஸை சேர்த்துக் கொண்டால் கூடுதல் நார்ச்சத்தும், புரதமும் கிடைக்கும்.
பேக் செய்யப்பட்ட பேன்கேக்
பேக் செய்யப்பட்ட பேன்கேக்குகளில் சர்க்கரை அல்லது தேனால் கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். இவை நம் வாய்க்கு சுவையை அதிகரிக்க மட்டுமே உதவும். ஆகவே உங்களுக்கும், உங்கள் இடைக்கும் நல்லது செய்ய வேண்டுமானால், அவைக்களை தவிர்த்து, முழு கோதுமையில் லேசாக வெண்ணெய் தடவி செய்யப்பட்ட டோஸ்ட்டை உண்ணுங்கள்.
கடையில் வாங்கப்படும் க்ரானோலா (Granola)
கடையில் வாங்கப்படும் பல வித க்ரானோலாக்களும் ஆரோக்கியமானதாக தெரியும். அதற்கு காரணம் அதிலுள்ள தேன், சர்க்கரை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்களின் கலவை. ஆனால் அதில் அதிகமாக இருப்பது கொழுப்பும் கலோரிகளும் தான். பல க்ரானோலாவில் மறைக்கப்பட்ட சர்க்கரையும் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பேக் செய்யப்பட்ட அதன் பெட்டியில் உள்ள விவரத்தை படித்து, அது ஆர்கானிக் உணவா அல்லது எளிய சர்க்கரையில் செய்யப்பட்ட இயற்க்கை வகையா என்பதை தெரிந்து கொள்வது மட்டும் தான். அப்படி இல்லையென்றால் காலை உணவிற்கு நீங்கள் உண்ணுவது டெசர்ட் ஆகி விடும்.
கடையில் வாங்கும் சாண்ட்விச்
முட்டை, இறைச்சி, சீஸ் மற்றும் ரொட்டி டோஸ்ட்டுடன் சேர்ந்து சமநிலையுடன் கூடிய காலை உணவாக சாண்ட்விச் விளங்கலாம். ஆனால் கடையில் வாங்கிய சாண்ட்விச்சை பிரித்து பார்த்தால், பிசுபிசுவென இருக்கும் பொறித்த முட்டை, பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மற்றும் கொழுப்புள்ள சீஸை மட்டும் தான் காண முடியும். அதனால் குறைந்த கொழுப்பை உடைய சீஸ் மற்றும் முட்டையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட சாண்ட்விச்சையே உண்ணுங்கள்.
ஸ்மூத்தீஸ்
ஸ்மூத்தீஸ் முழுவதுமே சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்படுபவை. கடையில் வாங்கப்படுவதில் கொழுப்பு நிறைந்த பால் அல்லது க்ரீம் தான் அதிகமாக இருக்கும். அதனால் காலை உணவிற்கு அது ஒரு டெசர்ட் பானம் போல் தான் இருக்கும். மாறாக தயிர், பாதாம் அல்லது கடைந்த பால் மற்றும் நற்பதமான பழங்கள் மற்றும் நட்ஸ்களையும் சேர்த்து வீட்டிலேயே தயார் செய்யுங்கள்.