29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
legpain 15
மருத்துவ குறிப்பு

கால் வலி அதிகமா இருக்கா? அதிலிருந்து விடுபட இயற்கை வைத்தியங்கள்!

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.

அதில் ஆரம்பத்தில் கால்கள் வலிக்க ஆரம்பித்து, பின் நாளாக ஆக தாங்க முடியாத வலியை உண்டாக்கும். கால்கள் வலிப்பதற்கு உடல் பருமன் மட்டும் காரணமல்ல, வேறுசில காரணங்களும் உள்ளன. சில வகையான கால் வலிகள் எரிச்சலூட்டி, மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும். இன்னும் சில வகை கால் வலிகள் மிகுந்த வலியை உண்டாக்கும்.

இந்த கால் வலிகளுக்கு தீர்வே கிடையாதா என்று பலர் புலம்புவார்கள். ஒரு நல்ல செய்தி என்னவென்றால், கால் வலிகளுக்கு இயற்கையாகவே எளிதில் தீர்வு காணலாம். இக்கட்டுரையில் கால் வலிக்கான சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பின்பற்றினால் நிச்சயம் கால் வலியில் இருந்து விடுபடலாம்.

கால் வலிக்கான காரணங்கள்

* எலும்பு மூட்டு இணைப்புக்களில் காயங்கள்

* தசை அல்லது தசைநார்களில் கிழிசல்

* இரத்த உறைவு, மோசமான இரத்த ஓட்டம்

* வெரிகோஸ் வெயின் அல்லது சுருள் சிரை நரம்பு

* எலும்பு தேய்மானம்

கால் வலிக்கான அறிகுறிகள்

* கால்கள் மற்றும் முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உணர்வின்மை

* கால் தசை பிடிப்புக்கள்

* சர்க்கரை நோய் காரணமாக நரம்பு சேதத்தால் ஏற்படும் கூச்ச உணர்வு

* நழுவிய வட்டுக்களால் ஏற்பட்ட நரம்பு சேதம்

உடனே மருத்துவரை அணுக வேண்டியவர்கள்:

* நடந்தாலோ அல்லது அசைந்தாலோ கடுமையான வலியை உணர்பவர்கள்

* என்ன தான் மருந்து மாத்திரைகளை எடுத்தாலும் தாங்க முடியாத வலியை உணர்பவர்கள்

* இரண்டு கால்களும் உணர்வின்றி மரத்து போயிருப்பவர்கள்

கால் வலிக்கான இயற்கை வைத்தியங்கள்

பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான் கால் வலி. இந்த கால் வலிக்கு எளிய முறையில் வீட்டிலேயே தீர்வு காணலாம். அதுவும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே ஈஸியாக தீர்வு காண முடியும். இப்போது அந்த இயற்கை வழிகள் எவையென்று காண்போம்.

ஒத்தடம்

* ஒரு வாணலியில் அரிசியைப் போட்டு சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு மென்மையான துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு வலியுள்ள கால் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

* இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை தொடர்ந்து செய்து வந்தால், கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* நல்ல மாற்றத்தைக் காண இந்த செயலை தொடர்ந்து ஒரு வாரம் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

எண்ணெய் மசாஜ்

* 1 டீஸ்பூன் வின்டர்க்ரீன் ஆயிலுடன், 4 டீஸ்பூன் வெஜிடேபிள் ஆயில் மற்றும் வைட்டமின் ஈ ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த எண்ணெய் கலவையை பாதிக்கப்பட்ட கால் பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

* இப்படி தினமும் 2-3 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

யோகாசனம்

* யோகாசனங்களின் மூலம் கால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

* கால் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க சர்வங்காசனத்தை தினமும் செய்வது நல்லது.

* அத்துடன் சாவாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றையும் சேர்த்து செய்து வருவது கால் வலிக்கு மிகவும் நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர்

* 1- 2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் வலிமிக்க கால்களை 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

* இல்லாவிட்டால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* இந்த பானத்தை தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்

* ஒரு பாத்திரத்தில் மாட்டுப் பாவை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்துக் கொள்ளுங்கள்.

* பின் அதில் 1-2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின்பு இந்த பாலை வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். இப்படி தினமம் 2 முறை என கால் வலி போகும் வரை குடியுங்கள்.

எப்சம் உப்பு

* ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1 கப் எப்சம் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* அதில் இரண்டு கால்களையும் 15-20 நிமிடம் ஊற வையுங்கள்.

* இந்த முறையை தினமும் 2 முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வர, கால் வலி குறையும்.

எலுமிச்சை சாறு மற்றும் விளக்கெண்ணெய்

* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் சுத்தமான விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் இந்த கலவையை வலியுள்ள கால் பகுதிகளில் தடவி 5 நிமிடம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

* பின்பு 2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கால்களைக் கழுவ வேண்டும்.

* இப்படி தினமும் 2 முறை என வலி போகும் வரை செய்யுங்கள்.

சூரிய வெளிச்சம்

* கால் வலியால் கஷ்டப்படுபவர்கள் வைட்டமின் டி நிறைந்த உணவை அதிகம் சாப்பிட வேண்டும்.

* முக்கியமாக அதிகாலை சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

* இப்படி ஒரு மாதம் தொடர்ந்து நடைப்பயிற்சியை மேற்கொண்டால், கால் வலி வருவது குறையும்.

பொட்டாசியம் உணவுகள்

* தினமும் 2 வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். சர்க்கரைவள்ளிக் கிழங்கை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* உலர் திராட்சை, ப்ளம்ஸ், நட்ஸ் மற்றும் தக்காளி ஜூஸ் குடியுங்கள்.

* ஏனெனில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம், கால் வலி வருவது தடுக்கப்படும். இதனால் தான் மருத்துவர்களும் கால் வலிக்கு பொட்டாசிய மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள்.

Related posts

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவோம்

nathan

மூக்கடைப்பிற்க்கான சித்த மருந்து

nathan

மூல நோயை சரியாக்கும் பசலைக் கீரை

nathan

தைராய்டு பிரச்சினையால் ஒரு பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல்

nathan

தெரிஞ்சிக்கங்க…பித்தம் தெடர்பான பிரச்சினைகளை எளிய முறையில் போக்க இதோ சில மருத்துவ குறிப்புகள்

nathan

குழந்தை நோய்களும் -ஹோமியோ மருத்துவமும்

nathan

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…

nathan

டென்டல் கிளிப்… டென் கைட்லைன்ஸ்!

nathan

உங்களுக்கு தெரியுமா தோல் வியாதிகளை குணப்படுத்தும் மருதாணி…!

nathan