அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கற்றாழையின் சரும பராமரிப்பு

Aloe-Vera-Natural-Health-and-Beautyகற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால் அவை முகப்பருவை நீக்குகின்றன.

முகப்பருவை குறைக்க கற்றாழையை தினமும் தடவி வந்தால் பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

வறட்சியான சருமம் இருந்தால் அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால் அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவி பின் மேக்-கப் போட்டால் நன்றாக இருக்கும்.
உடல் எடை அதிகரிக்கும் போது அல்லது கர்ப்ப காலத்தில் உடலில் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் தோன்றும். அதனை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும்.

Related posts

பணத்தை காந்தம் மாதிரி இழுக்கும் 5 ராசிக்காரங்க…

nathan

வேக்சிங் செய்வது எப்படி?

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன….?

nathan

முகம் வறண்டு இருந்தால் இந்த ஆயுர்வேத குறிப்புகளை பயன்படுத்தி அழகிய முகத்தை பெறுங்கள்…..

sangika

அழகு குறிப்புகள்….சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம்….

nathan

நச்சென்ற அழகுடன் திகழணுமா?

nathan

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா?

nathan

அழகை அள்ளித்தரும் ரோஸ் வாட்டர்

nathan