36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சரும பராமரிப்பு

இதை முயன்று பாருங்கள்..வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி…?

வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

ஒரு சிறிய வாழைப்பழத்தைக் கூழாக்கி, கெட்டி தயிர் மற்றும் தேன், ஓட்ஸ் மாவு கலந்து குளிப்பதற்கு முன் முகம், கை, கழுத்து பகுதிகளில் தடவி காய்ந்ததும் குளிக்கலாம். இதனை வாரம் ஒருமுறை செய்து வரலாம்.

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன்பின், உங்களுக்கு நார்மல் சருமமாக இருப்பின் ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.

தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மை நோய் விட்டுச் சென்ற கொப்புளங்களின் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம்.

ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறு கொத்து வேப்பந்தளிர், கொஞ்சம் இளநீர், கஸ்தூரி மஞ்சள் பவுடர்.. இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளின் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.

ஒரு டீஸ்பூன் பால், மற்றும் இரண்டு டீஸ்பூன் கோதுமை மாவை ஒரு வாழைப்பழத்துடன் கலந்து, முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி பத்து நிமிடங்கள் கழித்து, ஒரு காட்டன் துணியில் பாலை தோய்த்து முகத்தில் ஒற்றி எடுக்கலாம். எண்ணெய் சருமம் என்றால் மிதமான வெந்நீரில் கழுவி விடலாம். இதனால், சருமத்தின் மெருகு கூடி பளபளப்பாகும்.

Related posts

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!

nathan

Super Beauty tips.. சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?!

nathan

கவர்ச்சியான கைகளுக்கு இதை முயன்று பாருங்கள்…

nathan

குங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.

nathan

பண்டைய காலத்தில் வாழ்ந்த பெண்கள் அழகுக்காக இதெல்லாமா பயன்படுத்தியிருக்காங்க தெரியுமா?

nathan

பெண்களே…. அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? எளிய நிவாரணம்

nathan

பொலிவான சருமத்தையும் பளபளக்கும் கூந்தலையும் பெற

nathan

குளிர்காலத்தில் சருமத்தில் தோல் உரிவதைத் தடுக்கும் ஃபேஸ் மாஸ்க்குகள்

nathan

ஒரே வாரத்தில் பொலிவிழந்த சருமத்தை வெண்மையாக்க வேண்டுமா?

nathan