26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
02 sonam
எடை குறைய

உங்களுக்கு தெரியுமா பிரபலங்களின் எடை இழப்பிற்கான ரகசியங்கள்!!!

நிறைய நடிகர், நடிகைகள் குண்டாக இருந்து சிறிது நாட்களிலேயே ஒல்லியாக மாறியிருப்பதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக நடிகைகள் தான் தங்களின் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்வார்கள். அதிலும் பிரசவத்திற்கு பின் நிறைய நடிகைகள் தங்களின் பழைய உடல் அழகைப் பெறுவார்கள். அப்படி பெறுவதைப் பார்க்கும் போது, அவர்களால் மட்டும் எப்படி உடல் எடையை கச்சிதமாக பராமரிக்க முடிகிறது என்று பலர் யோசித்திருப்பீர்கள்.

பிரபலங்கள் தங்களின் உடல் எடையை கச்சிதமாக வைத்துக் கொள்ள மூன்று முக்கிய கூறுகளைப் பின்பற்றுகின்றனர். அவையாவன ஆரோக்கியமான டயட், உடற்பயிற்சி மற்றும் குறிக்கோள் கொண்டு அவற்றை பெற முயற்சிப்பது தான். இந்த மூன்றையும் மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் அழகான உடல் கட்டமைப்பைப் பெறலாம்.

நீங்கள் உங்களுக்கு பிடித்த பிரபலங்கள் போன்று அழகாக இருக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளதை தவறாமல் பின்பற்றுங்கள். ஏனெனில் இவற்றைத் தான் ஒவ்வொரு பிரபலங்களும் பின்பற்றி வருகின்றனர். சரி, இப்போது பிரபலங்கள் தங்களின் உடலை அழகாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் வழிகளைப் பார்ப்போமா!!!

நீர்ம டயட்

உடல் எடை விரைவில் குறைய வேண்டும் என்று நினைத்தாலோ அல்லது எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலோ, தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை பருக வேண்டும். இதனால் செரிமான மண்டலமானது சுத்தமாக்கப்பட்டு, வயிற்றில் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதைத் தடுக்கலாம். மேலும் நீர்ம நிலையில் உள்ள பானங்களை அவ்வப்போது எடுத்து வர வேண்டும்.

உணவுகளை தவிர்க்கக்கூடாது

எப்போதும் சரியான நேரத்தில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். முக்கியமாக காலை உணவை அவசியம் சாப்பிட வேண்டும். ஒருவேளை அப்படி சாப்பிடாவிட்டால், வயிற்றில் வாயு நிரப்பப்பட்டு, வசதியற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதோடு, வேறு எப்போதாவது சாப்பிட அமரும் போது அளவுக்கு அதிகமாக உட்கொள்ள நேரிடும். இதனால் உடல் எடை குறைவது தடுக்கப்பட்டு, எடையானது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

வெள்ளை உணவுகளை தவிர்க்கவும்

வெள்ளை நிற உணவுகளில் சர்க்கரை அதிகம் இருக்கும். அப்படி சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்து வந்தால், உடலானது கொழுப்புக்களை முதலில் கரைக்காமல் சர்க்கரையை கரைக்க ஆரம்பிக்கும். இதனால் கொழுப்புக்களானது உடலில் தங்கி உடல் பருமனை அதிகரித்துவிடும். அதனால் தான் பல பிரபலங்கள் சர்க்கரையையோ அல்லது வெள்ளை பிரட்டுகளையோ அல்லது சாதத்தையோ அதிகம் சாப்பிடுவதில்லை.

காரத்தை சேர்க்கவும்

உணவுகளில் காரத்தை அதிகம் சேர்த்து வந்தால், உணவின் சுவை அதிகரிப்பதோடு, உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களும் கரைந்து, உண்ணும் உணவின் அளவும் குறையும். எனவே உணவில் காரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ரசாயனம் சேர்க்காத உணவுப் பொருட்கள்

நீங்களும் விரைவில் உடல் எடையை குறைக்க நினைத்தால், ரசாயம் சேர்க்காத உணவுப் பொருட்களை வாங்கி உட்கொண்டு வாருங்கள். ஏனெனில் ரசாயனம் சேர்த்த உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது, அவை உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜெனின் அளவை அதிகரித்து, உடலில் கொழுப்புக்கள் கரைவதை தடுக்கும். ஆனால் ஆர்கானிக் உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உட்கொண்டால், உடல் பருமனடைவதைத் தடுக்கலாம்.

முட்டைக்கோஸ் சூப்

மற்றொரு சிறப்பான எடையை குறைக்கும் வழி தான் முட்டைக்கோஸ் சூப் குடிப்பது. அதிலும் முட்டைக்கோஸ் சூப்பை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், எடையில் நல்ல மாற்றம் தெரியும்.

ஒரு மணிநேர உடற்பயிற்சி

தினமும் தவறாமல் ஒரு மணிநேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களானது கரைந்து, உடல் எடையை குறைக்கும்.

தேங்காய் எண்ணெய்

சூப்பர் மாடலான மிராண்டா கெர், தனது உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வாராம். இதனால் அவரது சருமம் மென்மையாக இருப்பதோடு, வயிற்று தொப்பை வருவதும் தடுக்கப்படுமாம். ஏனெனில் மற்ற எண்ணெய்களை விட தேங்காய் எண்ணெயில் கலோரிகள் குறைவாக உள்ளது. எனவே நீங்களும் உணவில் தேங்காய் எண்ணெய் சேர்த்து வாருங்கள். முக்கியமாக கேரளா நடிகைகள் நன்கு அழகாக சிக்கென்று இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.

ஆல்கஹாலை தவிர்க்கவும்

முக்கியமாக ஆல்கஹால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹாலில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. எனவே உடல் எடை குறைய வேண்டுமானால் ஆல்கஹால் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

நடனம் உதவும்

மேற்கூறிய அனைத்தையும் விட முக்கியமானது தான் நடனம். பிரபலங்கள் நடனம் அதிகம் ஆடுவதால் தான், அவர்களின் கட்டுடல் அழகாக சிக்கென்று உள்ளது. எனவே நீங்களும் நடன வகுப்பில் சேர்த்து பயிற்சி பெற்று வாருங்கள்.

உடற்பயிற்சி இயந்திரம்

உடற்பயிற்சி செய்ய நிறைய இயந்திரங்கள் தற்போது உள்ளது. அவற்றில் ஒன்றான நீள் இயந்திரம் என்னும் எலிப்டிக்கல் இயந்திரத்தில் தினமும் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

20 நாட்கள்.. 15 கிலோ எடையை குறைக்க சீரகத்தை இப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…திருமணத்திற்கு பின் பெண்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

nathan

ஆண்களின் வயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்கும் உணவுகள்

nathan

உடல் எடை விரைவில் குறைக்க இதை குடிங்க

nathan

உடல் எடை குறைக்க நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்!இதை முயன்று பாருங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கலாம்!

nathan

வயிற்றில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும் ஜூஸ்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உடல் எடையை குறைக்க தூண்டுகோலாகும் நடைப்பயிற்சி

nathan