23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Image 18
மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…முந்திரியில் குப்பை என வீசும் இந்த பகுதியில் தமிழர்கள் மறந்த மருத்துவம்!

முந்திரி பருப்பு எல்லாரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது சுவைப்பதற்கு பட்டர் டேஸ்ட்டில் இருக்கும். அதுமட்டுமல்லாமல் வறுத்த முந்திரியில் கொஞ்சம் கருப்பு உப்பு தூவி சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.

இந்தியாவை பொருத்த வரை இது தான் மக்களின் விருப்பமான ஸ்நாக்ஸ்ம் கூட. இந்த முந்திரி பருப்பில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். அது பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 

நட்ஸ் வகைகளில் இது மிகவு‌ம் சிறந்தது. இதை அப்படியே பச்சையாகவோ அல்லது வறுத்து உப்பு தூவி கூட நீங்க சாப்பிடலாம்.

இந்த முந்திரி பருப்பு மருத்துவ துறையிலும், வருமானம் ரீதியாகவும் நிறைய வகைகளில் பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முந்திரியின் ஒவ்வொரு பாகங்களுமே பயன்படுகின்றன.

 

 

 

முந்திரி பட்டை மற்றும் இலை

முந்திரி பட்டை மற்றும் இலைகளை பொதுவாக குப்பையில் வீசுவது வழக்கம். ஆனால், இதனை நம் மூதாதையர்கள் மருத்துவத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதன் பட்டை மற்றும் இலை வயிற்று போக்கு, தலைவலி மற்றும் வலிகளுக்கு பயன்படுகிறது. இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது. முந்திரி பட்டை வாயில் ஏற்படும் அல்சருக்கு (புண்கள்) பயன்படுகிறது.

முந்திரி பருப்பு திரவம்

முந்திரி பருப்பு கூட்டில் இருந்து பெறப்படும் திரவம் மருத்துவ குணங்கள் மற்றும் ஆன்டி பயாடிக் தன்மையை கொண்டுள்ளது. நுரையீரலை சுத்தம் செய்யும். இது லேப்பிராசி, மருக்கள், ஸ்கர்வி, பற்களில் ஏற்படும் புண்கள், படர்தாமரை போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

முந்திரி விதை மற்றும் தண்டுகள்

முந்திரி பருப்பு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் பாதங்களில் ஏற்படும் வெடிப்பை போக்க பயன்படுகிறது. அதன் தண்டுகளிலிருந்து பெறப்படும் பிசின் புத்தகங்கள் மற்றும் மரங்களை வார்னிஸ் செய்ய பயன்படுகிறது.

முந்திரிப்பழம்

இதன் ஆன்டி பயாடிக் தன்மையால் வாயு மற்றும் வயிற்று அல்சருக்கு பயன்படுகிறது. முந்திரி பழத்திலிருந்து பெறப்படும் திரவம் ஸ்கர்வி நோயை குணப்படுத்த பெரிதும் பயன்படுகிறது.

நன்மைகள்

 

  • வாரத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைகளில் நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறைந்து சிக்கென்று இருப்பீர்கள்.
  • இந்த முந்திரி பருப்பில் மோனோசேச்சுரேட்டேடு கொழுப்பு, பாலிஅன்சேச்சுரேட்டேடு கொழுப்பு போன்றவை உள்ளன. இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை, ட்ரைகிளிசரைடு போன்றவற்றை எரித்து நல்ல கொலஸ்ட்ராலை சமன் செய்கிறது.
  • இதனால் இதய நோய்கள், பக்க வாதம், கரோனரி இதய நோய்கள் போன்றவை வராமல் காக்கிறது. இந்த நட்ஸில் அதிகளவு மக்னீசியம் உள்ளது. இது இதய தசைகளுக்கும், உயர் இரத்த அழுத்தத்துக்கும் பயன்படுகிறது.
  • முந்திரி பருப்பில் உள்ள பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம் மற்றும் விட்டமின் கே போன்றவை நமது எலும்பு மற்றும் பற்கள் உற்பத்திக்கும் வலிமைக்கும் துணை புரிகிறது. மக்னீசியம் எலும்புகளின் உருவாக்கத்திற்கும் கால்சியம் எலும்பின் வலிமைக்கும் உதவுகிறது.
  • இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற விபரீதம் வராமல் தடுக்கிறது.
  • டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு முந்திரி பருப்பு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் ஆன்டி டயாபெட்டிக் தன்மை உள்ளது. இது இன்சுலின் சுரப்பை சமநிலையில் வைக்கவும், குளுக்கோஸை கட்டுப்பாட்டில் வைக்கவும் பயன்படுகிறது.
  • முந்திரி பருப்பு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான டோகோபெரோல்ஸ், அனார்டுக் அமிலங்கள், கார்டனல்கள், கார்டொல்ஸ் மற்றும் சில ஃபினோலிக் போன்றவைகள் முந்திரி பருப்பு ஓட்டில் உள்ளன.
  • இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை யும், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், செல் பிறழ்ச்சி, டிஎன்ஏ பாதிப்பு, கேன்சர் செல்கள் போன்ற பிரச்சினைகளை சரிகட்ட உதவுகிறது.
  • சிறுநீர்ப் பையில் அதிகளவு கொழுப்பு படிகங்கள் தங்குவதால் சிறுநீர்க் கற்கள் உருவாகிறது. ஆராய்ச்சி தகவல்கள் படி நட்ஸ் அதிகமாக சாப்பிடும் போது பெண்களுக்கு ஏற்படும் குளோசிஸ்டெக்டோமி அபாயத்தை குறைக்கிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா புற்று நோய்களிலிருந்து மனிதரைக் காக்கும் சப்பாத்திக் கள்ளியின் மருத்துவ நன்மைகள்!!

nathan

தொட்டினால் ஒட்டும் தொடாமலும் தொற்றும் கண்நோய்

nathan

தெரிஞ்சிக்கங்க…தாய்ப்பால் தரும் பெண்கள் குளிர்பானங்கள் குடிக்கலாமா?

nathan

ஆஸ்டியோபோரோசிஸ்! எலும்புச் சிதைவு நோய்!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… வெந்நீரில் குளிப்பதால் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன?

nathan

இளம் வயதில் ஆண்மை குறைவு ஏன் ஏற்படுகின்றது?

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

குழந்தை பெற்றுக் கொள்வதை நினைத்தாலே பயப்படுபவரா நீங்கள்? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்

nathan