”30 வயதுக்கு மேல் கால்சியம் கிரகிக்கும் தன்மை குறையத் தொடங்கும். இதனால், எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். அந்தச் சமயத்தில் உணவின் மூலம் அதிகமான கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பற்களும் எலும்புகளும் வலுவிழந்து உடல் சோர்வு ஏற்படும். உடலில் கால்சியம் சேருவதையும் சிறுநீரகம் மூலமாக வெளியேறுவதையும் உறுதிப்படுத்துவது ‘பாராதைராய்டு’ (PARATHYROID) ஹார்மோன். கால்சியம் அளவு குறையும் போது இந்த பாராதைராய்டு சுரப்பியானது எலும்பில் இருந்து கால்சியத்தை எடுத்து ரத்தத்தில் சேர்க்கிறது.’