pregnancy
ஆரோக்கிய உணவு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடிய பழங்கள்!

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் பார்க்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். ஆனால் இக்காலத்தில உண்ணும் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஒருசில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதே சமயம் ஒருசில உணவுப் பொருட்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் ஆரோக்கியத்தைத் தரும்.

உதாரணமாக பழங்களை எடுத்துக் கொண்டால், பப்பாளி, அன்னாசி போன்றவை குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. ஆனால் ஒருசில பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. உங்களுக்கு கர்ப்ப காலத்தில் என்ன பழம் சாப்பிடுவது நல்லது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால், இங்கு கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

குறிப்பு: எவ்வளவு தான் ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அளவாக எடுத்துக் கொள்வதே சிறந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அவகேடோ

அவகேடோவில் குழந்தையின் வளர்ச்சிக்கு வேண்டிய ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

மாம்பழம்

கோடைக்காலத்தில் கிடைக்கும் மாம்பழம் சுவையானது மட்டுமின்றி, கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பழமும் கூட. ஏனெனில் இவை செரிமான மண்டலத்தை சீராக இயங்கச் செய்வதுடன், இதில் வைட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது.

திராட்சை

நிறைய பெண்கள் திராட்சை சாப்பிடுவது நல்லதல்ல என்று நினைக்கின்றனர். ஆனால் திராட்சையில் உடலின் மெட்டபாலிச அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும் வைட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

சாத்துக்குடி

கர்ப்ப காலத்தில் ஏற்படும் காலை சோர்வு, குமட்டல் மற்றும் பல பிரச்சனைகளை போக்க சாத்துக்குடி மிகவும் சிறந்தது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இது குழந்தைக்கும் மிகவும் நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சையும் சாத்துக்குடியைப் போன்றது தான். கர்ப்பிணிகள் இதனை அன்றாடம் ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, செரிமான பிரச்சனையும் வராமல் தடுக்கலாம்.

வாழைப்பழம்

கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். இதற்கு தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் நிறைந்திருப்பதால், இது சூப்பர் உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இதனை எவ்வித பயமும் இல்லாமல் கர்ப்பிணிகள் தங்களின் டயட்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு

மழைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் ஆரஞ்சுப் பழம் கூட கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. இந்த சிட்ரஸ் பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. எவ்வித பயமும் இல்லாமல் கர்ப்பிணிகள் இதனை உட்கொள்ளலாம். மேலும் இந்த பழமானது குளிர்காலத்தில் விலைக் குறைவில் கிடைப்பதால், இதனை தவறாமல் அன்றாடம் சாப்பிட்டு வந்தால், குழந்தை மட்டுமின்றி, தாயும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

லிச்சி

கோடையில் அதிகம் கிடைக்கும் இந்த பழம் கூட கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் சிறப்பான பழங்களில் ஒன்றாகும்.

Related posts

பீட்ரூட் ஜூஸ் குடித்தால் என்ன நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு மூலம் கிடைக்கும் நன்மைகள்!!

nathan

ப்ளம்ஸ் பழத்தை தங்கள் டயட்டில் நிச்சயம் சேர்த்துக் கொள்ளலாம்..tips .. tips..

nathan

உடல் எடையை குறைப்பதற்கு முதலில் தேவை ஆரோக்கியமான உணவு முறையாகும். உடல் எடையை குறைக்க இப்போது அதிக பிரபலமாகி வரும் ஒரு முறை பச்சை காய்கறிகள் ஜூஸாகும்.

nathan

தெரிஞ்சிக்கங்க…அரிசியை ஏன் ஊறவைத்து சாப்பிடவேண்டும்?

nathan

red rice in tamil – சிவப்பு அரிசியின் அற்புதம்

nathan

சளி, இருமலுக்கு உடனடி நிவாரணம் தரும் கருப்பட்டி காபி

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா எல்லா நேரத்திலும் நெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு தான்..!!

nathan