29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
5 ginger
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!!!

ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நாம் உள்ளிழுக்கும் புகை, உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வகையான கிருமிகள் மற்றும் குப்பை ஆகியவை என சகல நச்சுக்களையும் விரட்ட வேண்டியது நாம் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற செயலாகும்.

உடலுக்குள் இருக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றும் விதமான நச்சு எதிர் உணவுகள் நம்முடைய உடலுக்கு அவ்வப்போது தேவைப்படுகின்றன. வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிரம்பியுள்ள சில உணவுகள் நம்முடைய உடலை சுத்திகரிக்கவும் மற்றும் உடலின் சில பாகங்களை சுத்தம் செய்யவும் உதவுகின்றன. நீண்ட நாட்களுக்கு நோய்வாய்ப்படாமல் வாழவும் மற்றும் பல்வேறு வகையிலான புற்றுநோய்கள் வராமல் தவிர்க்கவும் இதை விட சிறந்த வழி எதுவுமில்லை.

நமது உடலை சுத்தமாக வைத்திருக்க உதவியாக இருக்கும் உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் படிக்கப் போகிறோம். நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் உங்களுடைய உடலும், மனமும் முழுமையாக உற்சாகமடையும். எண்ணம் மற்றும் செயலில் ஒரு விதமான ஆர்வத்தை ஏற்படுத்தி அமைதியையும், உறுதியையும் இது செய்யத் தவறுவதில்லை. நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதால் ஏற்படக் கூடிய மன அமைதி தனித்தன்மை வாய்ந்தது.

உடலை சுத்தப்படுத்தும் உணவுகளைப் பற்றி இனி தெரிந்து கொள்வோம். இந்த சக்தி வாய்ந்த உணவுகளில் உள்ள தாதுப்பொருட்களும், ஊட்டச்சத்துக்களும் நச்சுப் பொருட்களை துரத்தியடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் இங்கே 12 வகையான உணவுப் பொருட்களைக் கொடுத்துள்ளோம் – தொடர்ந்து படியுங்கள்.

அவகேடோ

அற்புதத்தை ஏற்படுத்தக் கூடிய பழம் என பிரபலமாக இருக்கும் அவகேடோவில் நார்ச்சத்துக்களும், ஆக்சிஜன் எதிர்பொருட்களும் நிரம்பியுள்ளன. இவை தான் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுகளாகும். செரிமானத்திற்கு உதவி புரியும் நல்ல வகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவு தான் அவகேடோ.

பீட்ரூட்

நச்சுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினால், சூப்பர் உணவாக அறியப்படும் பீட்ரூட்களை உண்ண வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான மிகவும் சக்தி வாய்ந்த உணவுகளாக இவை உள்ளன.

முட்டைக்கோஸ்

நச்சுப் பொருட்களை விரட்டக் கூடிய அற்புதமான குணங்களை கொண்டிருக்கும் உணவு முட்டைக்கோஸ் ஆகும். முட்டைக்கோஸை தினமும் சாப்பிட்டால் நச்சுப் பொருட்களை விரட்டும் உங்களுடைய திட்டம் வேகம் பிடிக்கும்.

பூண்டு

பூண்டு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய உணவாகும். இது நுரையீரலை சுத்திகரிக்கவும் உதவும். இதிலுள்ள கந்தகத்தின் குணங்கள் நச்சுப் பொருட்களை மிகவும் சக்தியுடன் எதிர்த்து வெளியேற்றுகின்றன.

இஞ்சி

மிகவும் சக்தி வாய்ந்த நோயெதிர்ப்பு உணவாக கருதப்படும் இஞ்சியின் காரத்திற்கு, உடலிலுள்ள நச்சுக்களை விரட்டும் குணமும் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, ஆல்கஹால், புகை போன்ற நச்சுக்களை நீங்கள் விரட்டியடிக்க விரும்பினால் இஞ்சி தான் உங்களுக்கு கடவுள்.

வேர்க்கடலை

வேர்க்கடலையின் அற்புதமான குணங்கள் நச்சுக்களை எதிர்த்து திறமையுடன் செயல்படுகின்றன. உடலில் உள்ள சில வகையான நச்சுக்களை வெளியேற்ற வேர்க்கடலை உதவுகிறது. சிறுநீர் குழாய் தொடர்பான தொற்றுக்களில் இருந்து விலகி இருக்கவும் வேர்க்கடலை உதவுகிறது.

ப்ளூபெர்ரி

ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ள இந்த உணவு நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான குணங்களைக் கொண்டுள்ளது. உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸ்களை அறவே ஒழித்துக் கட்டுவது ப்ளூபெர்ரியின் தலையாய பணியாகும். நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்துவதும் இவற்றின் மற்றொரு உதவியாகும்.

பாதாம்

ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல் புற்றுநோயைத் தவிர்ப்பது வரை என பல்வேறு வகையான ஆரோக்கிய பலன்களைக் கொண்டதாக பாதாம் கொட்டைகள் உள்ளன. வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் பாதாம்களில் நிறைந்துள்ளன.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிடும் ஒவ்வொரு நாளும் மருத்துவர் விலகியிருப்பார் என்ற ஆங்கிலப் பழமொழியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே நச்சுக்களை நீக்கும் அற்புத உணவுகளில் ஒன்று ஆப்பிள் என தெரிந்திருக்கும். ஆப்பிளில் உள்ள சிலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை உடலை முழுமையாக சுத்தப்படுத்தும். ஆப்பிளில் உள்ள டெர்பெனாய்டுகள், ஃப்ளேவோனாயிடுகள் மற்றும் டி-க்ளூகேரேட் (Terpenoids, Flavonouids And D-Glucarate) ஆகிய முக்கியமான கூட்டுப் பொருட்கள் மூளையையும், நோய் எதிர்ப்பு குணத்தின் செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்துகின்றன.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கொடியில் மிகவும் திறன் வாய்ந்த நச்சு நீக்கும் குணங்கள் உள்ளன. மூப்படைவதை தவிர்க்கும் வகையில் இவை மிகவும் சிறப்பாக செயல்படும் என்பது உங்களுக்கான இனிப்பான செய்தி. மேலும், அஸ்பாரகஸ் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயத்தையும் தவிர்த்திடும்.

இலவங்கப்பட்டை

ஆச்சரியமான ஆரோக்கிய குணங்கள் இலவங்கப்பட்டை எண்ணெயில் உள்ளது. சின்னாமால்டிஹைட் மற்றும் சின்னாமைல் அசிடேட் ஆகிய இலவங்க எண்ணெய்கள் துடிப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்களாகும். இவை தான் என்றென்றும் சிறப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்காள குறிப்பிடப்படுகின்றன. மேலும், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகவும் சக்தி வாய்ந்த உணவுப்பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது.

ப்ராக்கோலி

உங்களுடைய உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் சக்தி கொண்ட உணவுகளில் ஒன்று ப்ராக்கோலி ஆகும். ஆக்சிஜன் எதிர்பொருட்கள் மற்றும் சில வைட்டமின்கள் நிரம்பியுள்ள ப்ராக்கோலி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. எனினும், ப்ரோக்கோலியை மைக்ரோவேவில் வைத்து சமைத்தால், அதன் நச்சு நீக்கும் குணங்கள் பறந்தோடி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related posts

சுவையான வேர்க்கடலை சட்னி

nathan

உடனடி ஆற்றலை கொடுக்கும் சில ‘சூப்பர்’ உணவுகள் இதோ!

nathan

கொழுப்பைக் குறைக்கும் தேநீர் வகைகள்

nathan

இஞ்சியை தோல் நீக்க ரொம்ப சிரமப்படுறீங்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

வெஜிடபிள் ரைஸ் கட்லெட்

nathan

சுவையான ரிப்பன் பக்கோடா

nathan

வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

nathan

வெள்ளை சக்கரையில் இவ்வளவு ஆபத்து இருக்கா?

nathan

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

nathan