சிலருக்கு கால் தொடைகளில் அதிகப்படியான சதை இருக்கும். இவர்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். இத்தகையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம்.இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை சற்று அகட்டியபடி நேராக நிற்க வேண்டும். ஸ்விஸ்பந்தை சுவற்றில் வைத்து, முதுகுப்பகுதி அதன் மீது படும்படி நன்கு சாய்ந்து பேலன்ஸ் செய்து கொள்ள வேண்டும். கைகளை முன்பக்கமாக நீட்டி கொள்ள வேண்டும்.இப்போது நாற்காலியில் (படத்தில் உள்ளபடி) உட்காருவது போல கால்களை சற்று மடித்து உட்கார்ந்து எழுந்தரிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது.பலன்கள் :
முன் தொடை, பின் தொடை மற்றும் பின்பக்க தசைப்பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து தரைகளை உறுதிப்படுத்தும்.