பிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம்.
ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். பிரசவத்தின் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
அதை பின்பற்றி பலன் பெறுங்கள்.
பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை பிறக்கும் நேரம் அதிகப்படியான அழுத்தம் வயிற்றில் கொடுப்பதால், அப்போது சில பெண்களுக்கு உடலில் உள்ள கழிவுகளும் வெளிவரும்.
ஆகவே தான் மருத்துவர்கள் பிரசவ வலி ஏற்படுவதற்கு ஒரு மாதத்தில் இருந்தே அதிகப்படியான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆகவே இந்த நேரத்தில் திடமான உணவுகளை அதிகம் சாப்பிடாமல், தண்ணீரையும், பானங்களையும் அதிகம் குடிக்க வேண்டும்.
இதனால் பிரசவத்தின் போது கழிவுகள் வெளியேறுவதை தவிர்க்கலாம்.
சிலருக்கு பிரசவத்தின் போது வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிரசவம் ஆகிய மூன்று ஒரே நேரத்தில் நடைபெறும். ஏனெனில் பிரசவத்தின் போது வயிறு மிகுந்த உப்புசத்துடன் இருப்பதால், அது இறுதியில் வாந்தியை வரவழைப்பதோடு, அத்துடன் இயற்கையாக நடைபெறும் வயிற்றுப்போக்கும் நடைபெறும். ஆனால் இந்த மாதிரியான விஷயத்தை யாரும் சொல்லவே மாட்டார்கள்.
பிரசவத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் மிகவும் கொடியது இரத்த அழுத்தமானது அதிகரிப்பது தான். ஏனெனில் குழந்தை வெளிவருவதற்கு தொடர்ச்சியாக கொடுக்கும் அழுத்தத்தினால், இரத்த அழுத்தமானது அதிகரிக்கும். இந்த பிரச்சனை சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரலாம் அல்லது சிலருக்கு சில நாட்களில் குணமாகலாம்.
பிரசவ வலி பிரசவத்தின் போது மட்டும் வரும் என்று நினைக்க வேண்டாம். அந்த வலியானது பிரசவம் முடிந்த பின்னர் சில நாட்களோ அல்லது வாரமோ இருக்கும். எனவே இந்த வலியை தவிர்க்க சரியான ஓய்வு மிகவும் அவசியமானது.
இவையே பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பின்னரும் நடைபெறும் விஷயங்கள். ஆகவே 9 ஆவது மாதம் வந்துவிட்டால், மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.