27.8 C
Chennai
Tuesday, Aug 19, 2025
hairloss
தலைமுடி சிகிச்சை

முடி இழப்பை தடுக்கும் வழிகள்

தேங்காய்: முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி கண்டிஷனும் செய்கிறது. முடி உடைதலை குறைக்கக் கூடிய அத்தியாவசிய கொழுப்புகள், கனிமங்கள் மற்றும் புரதங்களுடன் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.

முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை உபயோகிக்கலாம். இதன் உள்ளடக்கங்கள் உங்கள் முடிக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. சிறிது தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதை உங்கள் முடியின் வேரிலிருந்து நுனி வரை மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அலசவும். அல்லது தேங்காயைத் துருவி, அதை சிறிது தண்ணீர் கலந்து பிழிந்து அதன் பாலை எடுக்கவும். அதை நீங்கள் பார்த்த வழுக்கையாக உள்ள அல்லது மெலிதாக உள்ள பகுதியில் தடவவும். இரவு முழுவதும் அதை விட்டு, பின்பு மறுநாள் காலையில் அலசவும்.

வெங்காயச் சாறு: கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சல்பருக்கு வெங்காயம் ஒரு சிறந்த ஆதாரமாகும். அதன் சாற்றை உச்சந்தலையில் உபயோகிப்பது முடி விழுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. வெங்காயத்தை நன்றாக சிறிதாக வெட்டி அதன் சாற்றை பிழிந்தெடுக்கவும். அதை உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் விட்டு விடவும். ஒரு மிதமான ஷாம்பூவினால் அலசி முடியை உலர விடவும். முடிவுகளைப் பார்த்து இதை வாரம் இருமுறை உபயோகிக்கவும்.

பூண்டு: சில பல் பூண்டை நசுக்கவும். அதனுடன் சிறிது தேங்காய் எண்ணையை சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அதை சிறிது நேரம் குளிர வைத்து உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அதை, 30 நிமிடங்கள் விட்டு பின்பு அலசலாம். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறைகள் செய்யவும்.hairloss

Related posts

கூந்தல் ரொம்ப உதிர்கிறதா? கவலைய விடுங்க

nathan

நாட்டு சர்க்கரையினால் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் !!

nathan

நீளமான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? அப்போ இதை படிங்க…

nathan

பலவீனமான முடியை வலிமையாக்க உதவும் சில அட்டகாசமான எளிய வழிகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தலையில் உள்ள நரை முடி மறைய சூப்பர் டிப்ஸ்!

nathan

கட்டாயம் இதை படியுங்கள்..பெண்களையும் பாதிக்கும் வழுக்கை!

nathan

ஆரோக்கியமான கூந்தலுக்கு 5 கட்டளைகள்…

nathan

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

தலையிலிருக்கும் பேனை ஒழிக்க சில எளிய வீட்டுக் குறிப்புகள்

nathan