தலைமுடி சிகிச்சை

முடி இழப்பை தடுக்கும் வழிகள்

தேங்காய்: முடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது மட்டுமின்றி கண்டிஷனும் செய்கிறது. முடி உடைதலை குறைக்கக் கூடிய அத்தியாவசிய கொழுப்புகள், கனிமங்கள் மற்றும் புரதங்களுடன் நிறைய பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது.

முடி உதிர்வதைத் தடுக்க தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பாலை உபயோகிக்கலாம். இதன் உள்ளடக்கங்கள் உங்கள் முடிக்கு நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளது. சிறிது தேங்காய் எண்ணெயை சூடு செய்து அதை உங்கள் முடியின் வேரிலிருந்து நுனி வரை மசாஜ் செய்து, ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அலசவும். அல்லது தேங்காயைத் துருவி, அதை சிறிது தண்ணீர் கலந்து பிழிந்து அதன் பாலை எடுக்கவும். அதை நீங்கள் பார்த்த வழுக்கையாக உள்ள அல்லது மெலிதாக உள்ள பகுதியில் தடவவும். இரவு முழுவதும் அதை விட்டு, பின்பு மறுநாள் காலையில் அலசவும்.

வெங்காயச் சாறு: கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும் சல்பருக்கு வெங்காயம் ஒரு சிறந்த ஆதாரமாகும். அதன் சாற்றை உச்சந்தலையில் உபயோகிப்பது முடி விழுவதை கட்டுப்படுத்த உதவுகிறது. வெங்காயத்தை நன்றாக சிறிதாக வெட்டி அதன் சாற்றை பிழிந்தெடுக்கவும். அதை உச்சந்தலையில் தடவி, 15 நிமிடங்கள் விட்டு விடவும். ஒரு மிதமான ஷாம்பூவினால் அலசி முடியை உலர விடவும். முடிவுகளைப் பார்த்து இதை வாரம் இருமுறை உபயோகிக்கவும்.

பூண்டு: சில பல் பூண்டை நசுக்கவும். அதனுடன் சிறிது தேங்காய் எண்ணையை சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். அதை சிறிது நேரம் குளிர வைத்து உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அதை, 30 நிமிடங்கள் விட்டு பின்பு அலசலாம். இதை ஒரு வாரத்தில் இரண்டு முறைகள் செய்யவும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்! வெள்ளை முடி அதிகமா இருக்கா? இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan

பெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது சில விதிமுறைகளை

nathan

இதோ எளிய நிவாரணம்! தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

நாட்டு சர்க்கரையினால் உங்கள் தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ் !!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆண்களே, உங்களின் முடியை வைத்தே உங்களுக்கு 10 வயதை குறைப்பது எப்படி…?

nathan

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முடி உதிர்வு தொல்லைக்கு நிரந்தர தீர்வு

nathan

உங்களுக்கு தெரியுமா மஞ்சள் நிறமுடைய பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

nathan