24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
1ead8f4c fa7e 4806 9a7b 684ecec2450d S secvpf
மருத்துவ குறிப்பு

அல்சர் நோய்க்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வு

ல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்: குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

* அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

* ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

* சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

* கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

* வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

* பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

* மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

* பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

* சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

* காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

* உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

* தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

* சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

1ead8f4c fa7e 4806 9a7b 684ecec2450d S secvpf

Related posts

மெனோபாஸ் காலகட்டத்தில் அதிகளவில் பெண்களை தாக்கும் நோய்கள்

nathan

மாதவிடாய் காலத்தில் இந்த உணவுகளை மட்டும் சப்பிட்டு விடாதீர்கள்! ஏன் தெரியுமா?

nathan

இரண்டே நிமிடத்தில் மஞ்சள் நிற பற்கள் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

உங்களுக்கு நம் உடலில் இருக்கும் அமிலங்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் தெரியுமா!!

nathan

சூப்பர் டிப்ஸ்! தாங்கமுடியாத தலைவலியை போக்க வேண்டுமா?

nathan

முதுகு வலி வரதுக்கு இதெல்லாம் கூட ஒரு காரணம் உங்களுக்கு தெரியுமா???

nathan

நோய் நீக்கும் துளசிமாலை

nathan

பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் சப்போட்டா

nathan

இதில் நீங்கள் எந்த வகை தலைவலியால் அவஸ்தைப்படுகிறீர்கள்? அதற்கு காரணம் என்ன தெரியுமா?

nathan