ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்
ஹார்மோன் சமநிலையின்மையானது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி எந்த வயதிலும் ஏற்படும். இத்தகைய நிலைமை வந்தால், ஆரோக்கியமான வாழ்க்கையானது பாதிக்கப்படும். அதிலும் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இருப்பினும், அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதில் முதலிடத்தில் இருக்கும் மன அழுத்தம் தான் முக்கியமானது. அதுமட்டுமின்றி, அதிகப்படியான மன அழுத்தத்துடனான வாழ்க்கை முறையை மேற்கொண்டால், ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி, வாழ்க்கையையே பாழாக்கிவிடும்
இத்தகைய ஹார்மோன் சமநிலையின்மை ஏற்பட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறான அறிகுறிகள் இருக்கும். அதில் பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகளாவன அதிகப்படியான இரத்தப் போக்குடன், எடை அதிகரித்தல், முகத்தில் முடியின் வளர்ச்சி அதிகமாக இருப்பது போன்றவை. ஆண்களுக்கு என்றால் பாலுணர்ச்சி குறைவாகவும், விரக்தி, விந்தணுவின் உற்பத்தி குறைதல் மற்றும் பல உள்ளன. எனவே இத்தகைய பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டால், அவற்றை குணப்படுத்த ஒரு எளிமையான வழி உள்ளன. அது தான் உணவுகள்.
ஆம், உணவுகளின் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை குணப்படுத்தி சீராக வைக்க முடியும். மேலும் அத்துடன் லேசான உடற்பயிற்சி மற்றும் யோகாவை மேற்கொண்டால், நிச்சயம் ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யலாம். சரி, இப்போது ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் உணவுகளைப் பார்ப்போம்
தேங்காய் எண்ணெய்
ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானவை தான் தேங்காய் எண்ணெய். இத்தகைய தேங்காய் எண்ணெயை உணவில் சேர்த்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை மட்டுமின்றி, உடல் எடையையும் சீராக வைத்துக் கொள்ளலாம்.
தண்ணீர்
தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, மன அழுத்தமும் குறையும். இவ்வாறு மன அழுத்தம் குறைந்தால், ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்கலாம்
நட்ஸ்
நட்ஸில் புரோட்டீன் அதிக அளவில் நிறைந்துள்ளது. ஹார்மோன் பிரச்சனை இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு, அதனை சரிசெய்ய புரோட்டீன் உணவுகளானது மிகவும் இன்றியமையாதது.
காய்கறிகள்
ஹார்மோன் சமநிலையின்மையைப் போக்குவதற்கு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அதிலும் பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பீன்ஸ போன்றவற்றில் ஹார்மோன் சமநிலையின்மையை சீராக வைத்துக் கொள்ள உதவும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது.
கானாங்கெளுத்தி மீன்
கடல் உணவுகளில் கானாங்கெளுத்தி மீனை அதிகம் உணவில் சேர்த்தால், ஹார்மோன் பிரச்சனைகளை எளிதில் சரிசெய்யலாம்.
பூண்டு
உணவில் பூண்டுகளை அதிகம் சேர்ந்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை நீங்கி, சீராக இருக்கும். அதிலும் பூண்டை, பாலில் தட்டிப் போட்டு குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மை சீராகிவிடும்.
க்ரீன் டீ
க்ரீன் டீயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அத்தகைய க்ரீன் டீயை தினமும் குடித்து வந்தால், ஹார்மோன் சமநிலையின்மையினால் அதிகரிக்கும் உடல் எடையைக் குறைத்து கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
Related posts
Click to comment