31.2 C
Chennai
Saturday, Oct 19, 2024
201702271137392415 Things to look Workout SECVPF
உடல் பயிற்சி

வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. வொர்க் அவுட் செய்யும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வொர்க் அவுட் செய்யும் போது கவனிக்க வேண்டியவை
ஜூம்போ டான்ஸ் போன்றவை இப்போது ஜிம்களிலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒரு மணி நேரம் ஜூம்போ டான்ஸ் செய்வதால் ஐநூறு முதல் இரண்டாயிரம் கலோரிகள் வரை கூட எரிக்க முடியும். ஆனால் பல இடங்களில் 30 – 40 பேர் கூட்டம் கூட்டமாக டான்ஸ் செய்யும்போது ஒரு சிலருக்கு முழு பலன்கள் கிடைப்பதில்லை.

ஜூம்போ டான்ஸ்/ ஏரோபிக்ஸ் தெரியாதவர்கள் எப்போதும் டிரைனருக்கு முன் வரிசையில், அவர் சொல்லித் தருகிறபடி படிப்படியாக ஒவ்வொரு நிலையாக ஏரோபிக்ஸ் பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏதோ ஒரு வரிசையில், டிரைனரின் பார்வையில் படாதவாறு நின்று பயிற்சி செய்தால், ஒழுங்காக ஸ்டெப்ஸ்களை கற்றுக்கொள்ள முடியாது. அதோடு நேர விரயம், பண விரயம்தான் ஏற்படும். ஏரோபிக்ஸ் பயிற்சிக்கு நன்றாக பழக்கப்பட்டவர்கள் பின் வரிசைகளில் குழுவோடு சேர்ந்து பயிற்சி செய்வதில் தவறில்லை.

ஏரோபிக்ஸ் பயிற்சிகளைப் பொறுத்தவரை பாதுகாப்பான, நல்ல தரமான ஷூக்கள் அணிந்து பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல, பயிற்சி பெறும் இடத்தில் நல்ல தரை இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஜூம்போ/ஏரோபிக்ஸ் போன்றவை செய்வதற்கென பிரத்யேக மேட் போடப்பட்டிருக்கும் இடத்தில் மட்டுமே பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இல்லையெனில் கால், மூட்டு மற்றும் முதுகுத் தண்டு போன்ற பகுதிகள் பாதிக்கப்படும்.

உடல்பருமனாக இருப்பவர்கள், டான்ஸ் மற்றும் ஜம்பிங் பயிற்சிகள் போன்றவற்றை பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் செய்யக் கூடாது. ஏனெனில் மூட்டு வலி, கணுக்கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்றவையோ அல்லது அவ்விடங்களில் காயங்களோ ஏற்பட வாய்ப்புண்டு. முதுகுத் தண்டு பிரச்சனை இருப்பவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள், அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள் இப்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.201702271137392415 Things to look Workout SECVPF

Related posts

உடலையும் உறவையும் வலுப்படுத்தும் ஜோடி ஃபிட்னஸ் தெரியுமா?..

sangika

வயதானவர்கள் மெதுவாக உடற்பயிற்சி செய்யுங்க

nathan

தொப்பையை குறைக்கும் லையிங் லெக் ரைஸ் பயிற்சி

nathan

உடலை உறுதியாக்கும் தோப்பு கரணம்

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

தசைகள், மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் 5 பயிற்சிகள்

nathan

தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி Lying side leg raise….

nathan

கை, கால்களின் மூட்டு பிரச்சனையை குணமாக்கும் பர்வதாசனம்

nathan

உடற்பயிற்சிக்கு முன் சாப்பிடவேண்டிய உணவுகள்

nathan