25.2 C
Chennai
Tuesday, Dec 17, 2024
coverreasonsyouaretiredllthim
மருத்துவ குறிப்பு

வேலை பாக்கும் போது கூட தூக்கம் வருதா? முதல்ல இத படிங்க…

உங்களோடு அலுவலுகத்தில் பணிபுரிவோர், உங்கள் நண்பர்கள் ஏன் நீங்களே கூட யாரிடமாவது இவ்வாறு சொல்லியிருக்கலாம், ” என்னன்னு தெரியல ஒரே தூக்கமா வருது, வேலை செய்யவே முடியல சோம்பேறித்தனமாவே இருக்கு…” என்று. ஆம், கணினியின் மென்திரை முன்பு உட்கார்ந்து நீங்கள் வேலை செய்பவராக இருந்தால், இந்த எண்ணம் கண்டிப்பாக வரும். ஒவ்வொரு நாளும் நீங்கள் இதை உணர்திருப்பீர்கள்.

 

இதிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என நினைத்தால் உங்களது வாழ்க்கை முறையை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். ஓரிரு வாரங்கள் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எங்காவது அமைதியான சூழல் உள்ள இடத்திற்கு சென்று வர வேண்டும். உங்களது மனதிற்கு அமைதியை பரிசளிக்க வேண்டும். மிக மிக முக்கியமாக சமூக வலைத்தளங்களுக்கு விடுமுறை கொடுத்து. முற்றிலும் வேறு ஒரு புதுமையான அமைதியான வாழ்கையை நீங்கள் வாழ்ந்து திரும்பி வந்தால், உங்களுக்கு இனி அந்த சோம்பேறித்தனம் என்ற எண்ணமே வராது. இப்போது உங்களுக்கு இருக்கும் இந்த சோம்பேறித்தனத்திற்கு சில பல காரணங்கள் இருக்கின்றன, அது என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளலாம்….

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த சோகை

உங்களது இந்த சோம்பேறித்தனத்திற்கு இரத்த சோகையும் ஒரு வகையான காரணமாக இருக்கலாம். உங்கள் உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் உங்களுக்கு மயக்கம் வரும் மற்றும் உடல்திறன் குறைவாகிவிடும்.

தைராய்டு

உங்களுக்கு தைராய்டு நோய் உருவாகும் போது இதுப்போன்ற சோம்பேறித்தனமும், தூக்க நிலையும் ஏற்படும். எனவே, இவ்வாறு உங்களுக்கு தோன்றினால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய் இருந்தால், உங்களுக்கு அடிக்கடி மயக்கமும், தூக்க நிலையும், சோம்பேறித்தனமாகவும் உணர்வீர்கள்.

மன இறுக்கம்

நீங்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இதுப்போல உணர அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஐ.டி. யில் பணிபுரியும் பலருக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

முடக்கு வாதம்

இது மிக சிலருக்கே ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முடக்கு வாதத்திற்கான அறிகுறியாய், இதுப்போன்ற மயக்கம் வருவது, எப்போதும் தூங்கி விழுவது போன்ற உதாரணங்கள் கூறப்படுகின்றன. எனினும், 50 வயதை எட்டும் நபர்கள் இது போல உணர்ந்தால் தகுந்த மருத்துவரை கண்டு பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

நாள்பட்ட சோர்வு

ஒருவேளை உங்களுக்கு இந்த சோம்பேறித்தனத்தோடு தலைவலி, உடல் சோர்வு, உடல்திறன் குறைவு போன்றவை இருந்தால் நீங்கள் நாள்பட்ட சோர்வினால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் எனவே, நீங்கள் நன்கு அமைதியாக ஓய்வெடுப்பது மிக மிக அவசியம்.

Related posts

மருத்துவ உலகில் இந்த நிலையை `எரோட்டோமேனியா’ (Erotomania) என்கிறார்கள்….

sangika

சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்

nathan

மூட்டுவலிக்கு முற்றுப்புள்ளி

nathan

ஜவ்வு விலகலால் வரும் முதுகுவலி

nathan

சிறுநீரகத்தில் கற்கள் வருவதை தடுக்கும் இந்த கைவைத்தியங்கள்!.

nathan

மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் இதுதான்!

nathan

இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்

nathan

உங்களுக்கு கோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க…

nathan

கட்டியைக் கரைக்கும் சப்பாத்திக்கள்ளி

nathan