201611150833182255 Nutritional foods for working women SECVPF
ஆரோக்கிய உணவு

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்

இன்றைய சூழலில் பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு, வேலைக்குச் செல்லும் நிலையில் பல உடல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாக நேரிடுகின்றனர்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு தேவையான ஊட்டசத்து உணவுகள்
பொதுவாக பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிலக்கு சுழற்சியின் காரணமாக பலவகையான சத்துக்குறைபாடுகள் உண்டாகிறது. இத்தகைய சத்துக் குறைபாட்டால் உடல் பலவீனமடைந்து பாதிப்படைகிறது. இதனால் பெண்களுக்கு கூடுதல் ஊட்டசத்து தேவைப்படுகிறது.

நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் பெண்களுக்கு பருவம் எய்தியவுடன் வீட்டில் இருக்க வைத்து உடலுக்கு வலு கொடுக்கும் உணவுகளைக் கொடுத்து, மாதவிலக்கு காலங்களில் போதிய ஓய்வும் கொடுத்து வந்தனர். ஆனால், இன்றைய சூழலில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. மேலும் உணவு தயாரித்து அதை சாப்பிடக்கூட நேரமில்லாமல் அவசர அவசரமாக கிளம்பி பயணத்தின் போதே சாப்பிடுகின்றனர், அல்லது பட்டினி கிடக்கின்றனர்.

மேலும் மாதவிலக்கு காலங்களில் 3 அல்லது 5 நாட்கள் தனியாக அமர வைத்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஓய்வு கொடுத்தனர். அதை நாம் தவறாக புரிந்து கொண்டுள்ளோம். அந்த காலங்களில் போதிய ஓய்வு தேவை என்பதாலேதான் அவ்வாறு செய்தனர் என்பதனை உணரவேண்டும்.

போதிய சத்து குறைப்பாட்டால் குடலில் புண், பித்தம், அஜீரணம், தலைவலி, கை, கால் வலி, இடுப்பு, முதுகு வலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடல் அசைவில்லாமல் கணனி முன் அதிக நேரம் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவர்கள் இரவுப் பணி, குறைவான தூக்கம், மன அழுத்தம் இவைகளாலும் பெண்களின் உடல் பாதிப்படைகிறது. இத்தகைய பாதிப்புகள் பின்னாளில் பெரிய நோய்களாக மாறிவிடும்.

இத்தகைய உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபட இவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எடுத்து கொள்வது அவசியமாகும். அதற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை வாங்கி உண்பது நல்லதல்ல. அவை உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவையாக உள்ளது.

நம்முடைய அன்றாட உணவில் கீரைகள், காய்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பலபேர்களின் பிரச்சனைகளில் ஒன்று சிறுநீரை அடக்குவது அல்லது சிறுநீர் கழிவதைத் தடுக்க தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவற்றை தவிர்த்து நன்கு நீர் அருந்த வேண்டும். முளை கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.201611150833182255 Nutritional foods for working women SECVPF

Related posts

Tips.. பலாப்பழ பிரியர்கள் இதனை படிக்கவும்..

nathan

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

nathan

சுவையான காளான் தக்காளி ரொட்டி

nathan

சுவையான புடலங்காய் பஜ்ஜி

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த ‘ஒரு பொருள்’ இருந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக போக்கலாம் தெரியுமா?

nathan

கண் பிரச்சனைகளுக்கு வைட்டமின் சார்ந்த ஆரோக்கிய நலன் மற்றும் பலன்கள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…ஆப்பிள் தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா?

nathan

சூடான பானம் அருந்துபவரா?

nathan

உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன

nathan