தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – சிறியது 1
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தக்காளி – சிறியது 1
காய்ந்த மிளகாய் – 1
தாளிக்க :
கடுகு
கறிவேப்பிலை
எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :
• வெள்ளரிக்காயை தோலுடன் துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி இஞ்சி, வெள்ளரிக்காய், தக்காளி, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உப்பு ஒவ்வொன்றாக போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
• வதக்கியதை நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையில் கொட்டி பரிமாறவும்.
• வெள்ளரிக்காய் தோல் வெட்டும்போது கசப்பாக உள்ளதா என்பதை பார்த்த பின் வெட்டவும். தோல் கசப்பாக இருந்தால் தோலை நீக்கி விடவும்.