bhindi cashew poriyal
சமையல் குறிப்புகள்

வெண்டைக்காய் முந்திரி பொரியல் செய்வது எப்படி?

வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான மற்றும் சத்தான காய்கறி. நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். வெண்டைக்காயை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியமாக வைத்திருக்கும்.இந்த வெண்டைக்காய் பயன்படுத்தி சாம்பார், புளி மற்றும் பிரஞ்சு பொரியல் போன்ற பலவகையான உணவுகளை செய்யலாம். வெண்டைக்காய் , முந்திரி சேர்த்து வறுத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

வெண்டைக்காய் முந்திரி பொரியல் செய்வது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்டைக்காய் – 1/2 கிலோ

* பூண்டு – 4

* முந்திரி – 8

* துருவிய தேங்காய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்

* வரமிளகாய் – 1

* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி, துணியால் துடைத்துவிட்டு, பின் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் முந்திரியைப் போட்டு, பொன்னிறமாக மாறும் வரை வதக்கியதும், வெண்டைக்காயைச் சேர்த்து வதக்கவும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெண்டைக்காய் நன்கு சுருங்கி வேகும் வரை வதக்கவும்.

* வெண்டைக்காய் நன்கு வெந்ததும், இறுதியில் அதில் துருவிய தேங்காயை சேர்த்து பிரட்டி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் முந்திரி பொரியல் தயார்.

Related posts

டிப்ஸ்… டிப்ஸ்…டிப்ஸ்… டிப்ஸ்…!

nathan

நாவூறும் ருசியான தொக்கு செய்யலாம்! வெறும் வெங்காயம், தக்காளி போதும்!

nathan

சுவையான மசாலா சீயம்

nathan

அசைவ உணவுகள் சாப்பிடுபவரா? இதோ சில டிப்ஸ்

nathan

பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி

nathan

சூப்பரான பேபி கார்ன் மஞ்சூரியன்

nathan

இறால் புளிக்குழம்பு செய்யலாம்

nathan

கேரளா ஸ்டைல் வெங்காய புளிக்குழம்பு

nathan

கத்திரிக்காய் மசாலா குழம்பு

nathan