நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று மிளகு, இதில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் பல இருக்கின்றன.
மிளகில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
இப்படி பல நன்மைகளை கொண்ட மிளகில் கலப்படம் இருந்தால் கண்டறிவது எப்படி என தெரிந்து கொள்வோம்.
இதற்கு முதலில் சில மிளகுகளை எடுத்து டேபிளில் வைக்க வேண்டும்.
நம்முடைய கை விரலை கொண்டு மிளகை நசுக்கும் போது, நல்ல மிளகாக இருந்தால் நசுங்காமல் இருக்கும்.
கலப்படமாக இருக்கும் பட்சத்தில் எளிதில் உடையும்.
Detecting Blackberries Adulteration in Black Pepper#DetectingFoodAdulterants_9#AzadiKaAmritMahotsav@jagograhakjago @mygovindia @MIB_India @PIB_India @MoHFW_INDIA pic.twitter.com/0hQHrLrS1z
— FSSAI (@fssaiindia) October 6, 2021