25.7 C
Chennai
Monday, Dec 16, 2024
201611290901156395 children affect divorced parents SECVPF
மருத்துவ குறிப்பு

விவாகரத்தான பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர்.

விவாகரத்தான பெற்றோரால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின்றனர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தால், தங்கள் அன்றாட வேளைகளான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர்.

பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் பிரிவால் ஏற்படும் வடுவை, அவர்கள் பெரியவர்கள் ஆகும் வரையும் தாங்கி செல்கின்றனர். ஆனால் பிரிய முனைவதற்கு முன்னர் பெற்றோர்கள் விவாகரத்து செய்வதற்கு முன்பு அதை சரி செய்ய முனைய வேண்டும்.

விவாகரத்தால், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு, உங்களின் இளவயது பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதால், அவர்கள் ஆறுதலாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள். ஏனெனில் இயல்பாகவே எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றீர்கள் என்பதை அறியவும், உங்களுக்கு உதவவும் மிக ஆர்வமாக இருப்பார்கள், ஆனால் இந்த விஷயத்தில் அவர்களின் பெற்றோராகவே இருந்து, அவர்களிடமிருந்து எந்த ஆறுதலையும் எதிர் பார்க்காதீர்கள்.

பிள்ளைகளுடன் முன்னாள் துணைவரைப் பற்றிய, உங்களின் கோப உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள். பழைய வாழ்க்கையின் கோபத் தாபங்களை அவர்கள் முன் காட்டவும் வேண்டாம். உங்களுக்கான ஆறுதலை வெளியே தேடுங்கள். தேவைப்பட்டால் மன அமைதிக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடியுங்கள். மேலும் உங்கள் மனதின் பாரத்தை, பிள்ளைகளை சுமக்க வைப்பதென்பது தவறான செயலாகும். அது அவர்களை மிகவும் பாதித்து விடும்.201611290901156395 children affect divorced parents SECVPF

பெற்றோர்களின் விவாகரத்திற்கு பின் குழந்தைகளின் உணர்வுகள் கொந்தளிப்பான நிலையில் இருக்கும். எனவே, அவர்களின் நிலையை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அவர்கள் உணரும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். என்ன நினைக்க வேண்டும் என்று அவர்களுக்கு சொல்லாதீர்கள். இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், உங்கள் முன்னாள் வாழ்க்கைத் துணையை விமர்சித்து அவர்களிடம் பேசாதீர்கள்.

ஏனெனில் பிள்ளைகள் 50 சதவிகிதம் வாழ்க்கை துணைவரின் பாதி என்பதால், வாழ்க்கைத் துணையை விமர்சிப்பது உங்கள் பிள்ளைகளை விமர்சிப்பது போன்றதாகும். அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள். பெற்றோராக அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டாக வேண்டுமென்றில்லை, அவர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்தால் போதும். அவர்களைப் பற்றிய உங்களின் புரிதலும் அக்கறையுமே, அவர்களின் காயத்திற்கு சிறந்த மருந்து.

ஒன்றும் பேசாமல் இருப்பதும், உங்கள் குழந்தைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். மேலும் குழந்தையை உணர்வுப் பூர்வமாக சிந்திக்க வைத்து, மன உளைச்சலுக்கு ஆளாக்காமல், அவர்களிடம் மகிழ்ச்சியாக பேசி அவர்களின் மன உளைச்சலை போக்க வேண்டும். ஆகவே அவர்களிடம் வேடிக்கையாக பேசியும், பொதுவான விஷயங்களைப் பற்றியும் பேசி அவர்களை மகிழ்ச்சி படுத்துங்கள்.

குழந்தைகளிடம் மன்னிப்புக் கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் வெகு நாட்கள் பயணிக்க உதவும். மேலும் செய்த தவறை விரிவாக எடுத்துச் சொல்லி, இனிமேல் அது தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பிள்ளைகளிடம் ஒரு பாதுகாப்பான சைகையைப் பற்றி கூறுங்கள்.

எடுத்துக்காட்டாக, குழந்தைகளிடம் முன்னாள் வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசும் பொழுது, அது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் அவர்களின் கையை உயர்த்தும் படி சொல்லுங்கள். அது, நீங்கள் அப்படி பேசுவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதற்கான எச்சரிக்கை மணியாக இருக்கும். மேலும் இந்த வழக்கம் மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்வதிலிருந்து உங்களை காப்பாற்றும்.

Related posts

பாட்டி வைத்தியம்! பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்…

nathan

உங்க வாய் கப்பு அடிக்குதா? சில எளிய இயற்கை வைத்தியங்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மாதவிடாய் காலத்தில் மாத்திரம் முகத்திற்கு சோப்பு பயன்படுத்தக் கூடாதாம்! ஏன் தெரியுமா?

nathan

முப்பது வயதுக்கு மேல் ஆண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இத உணவில் அதிகமா சேர்த்துக்கிட்டா மாரடைப்பு வர வாய்ப்பிருக்காம்!

nathan

மாரடைப்பு அச்சம்… ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி இருக்கும் அறிகுறிகள்?

nathan

வெண்புள்ளியை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்……

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சின்னம்மைக்கான 6 அறிகுறிகள்!!!

nathan

துளசி நீரில் மஞ்சளினை கலந்து குடித்தால் நடக்கும் அற்புதம் என்ன தெரியுமா?

nathan