மாதுளம் பழம் பழங்காலம் முதலாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அளவில் இப்பழத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இப்போது மாதுளை பழத்தை ஆண்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
விறைப்புத்தன்மை பிரச்சனை
ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனைக் கொண்ட ஆணுக்கு மாதுளை ஜூஸ் குடித்து அப்பிரச்சனை குறைந்திருப்பது தெரிய வந்தது.
எனவே ஆண்கள் மாதுளையை அன்றாடம் சிறிது உட்கொண்டு வருவது, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும்.
புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய்
மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.
மூட்டு அழற்சி/ஆர்த்ரிடிஸ் (Arthritis)
தற்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மூட்டுப் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது.
ஆனால் தினமும் சிறிது மாதுளையை உட்கொண்டு வருவதன் மூலம், மூட்டுகளில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதால் பல ஆய்வுகள் கூறுகின்றன.
இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால்
ஆண்கள் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.
ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மூளை ஆரோக்கியம்
மாதுளையில் உள்ள பாலிஃபீனால்கள் அல்சைமர் நோய் வருவதைத் தடுப்பதாக லோமா லிண்டா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் இந்த ஆராய்ச்சியில் ஒரு பகுதி எலிகளுக்கு சர்க்கரை நீரையும், மற்றொரு பகுதியில் உள்ள எலிகளுக்கு மாதுளை ஜூஸையும் கொடுத்து வந்தார்கள்.
இதில் சர்க்கரை நீரைக் குடித்த எலிகளை விட, மாதுளை ஜூஸ் குடித்த எலிகள் பணிகளை விரைவில் கற்றுக் கொண்டன. ஆகவே மாதுளையை உணவில் அதிகம் சேர்த்தால், மூளை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படும்.