உடலில் வயிற்ருப்பகுதி பெரியதாக இருப்பதை மிகப்பெரிய ஆபத்தாக கருதவேண்டும். உடலின் கட்டுப்பாடு இழந்து பலவீனமானவர்களாய் ஆவதன் முதல் அறிகுறி தொப்பை வளர்வது.
என்னதான் உடற்பயிற்சி செய்தாலும் தொப்பையை அவ்வளவு எளிதாக குறைத்துவிட முடியாது. உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடே உடல் எடையை குறைபதற்க்கும், தொப்பையை குறைபதற்க்கும் உதவும்.
சரியாக உணவுப்பழக்கம்:-
உடல் எடை கூடுவதற்கு முதல் காரணம் சரியான உணவுமுறையை பின்பற்றாதது தான். ஆரோக்கியமான உணவுகளை சீரான இடைவெளியில் பின்பற்றினால் 80% எடை தொடர்பான பிரச்னையை குறைத்துவிடலாம்.
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் மூன்று விதிகளை பின்பற்றினால் உடல் எடை மட்டும் அல்ல எந்த நோயுமே நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
1. பசித்த பின் புசி
உடல் உழைப்பு என்பது வெகுவாக குறைந்துவிட்ட காரணத்தால் எதை சாப்பிட்டாலும் அதை பசித்த பின் சாப்பிடவேண்டும். மூன்று வேளை சாபிட்டே ஆகவேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருநாளைக்கு பத்துமுறை பசித்தால் கூட சாப்பிடலாம், ஆனால் பசித்த பின் எக்காரணம் கொண்டும் சாப்பிடாமல் இருக்க கூடாது அது அல்சருக்கு வழிவகுக்கும்.
2. அரை வாயிற்று பசியை மிச்சம் வை
பசித்துவிட்டது என்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளித் திணித்துவிடக்கூடாது. பசி முழுவதாக அடங்குவதற்கு முன் சாப்பாட்டை முடித்துவிட வேண்டும். பசியுடன் அமர்ந்து பசியுடன் எழும்ப வேண்டும்.
3. நொறுங்கத் தின்றால் நூறு வயது
எதை சாப்பிட்டாலும் நொறுங்க சாப்பிடவேண்டும். உணவை மென்று கூழாக்கி சாப்பிட்டு வந்தால் ஜீரணத்திற்கு ஆகும் நேரம் குறைவதால் உடலில் கொழுப்பு சேர்வது குறைந்து உடல் எடை விரைவில் குறையும்.