28.8 C
Chennai
Tuesday, Nov 5, 2024
22 61f1b40b
ஆரோக்கிய உணவு

விக்கலால் அவதிப்படுகிறீர்களா?சூப்பரா பலன் தரும்!!

பல வேளையில், அதிக சூடாக அல்லது வேகமாக சாப்பிடும் போதோ அல்லது காரமான உணவை உண்ணும் போது விக்கல் ஏற்படுகிறது. இது தவிர, பலருக்கு அதிக உற்சாகம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட விக்கல் வர ஆரம்பிக்கிறது. கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, குடல் அடைப்பு போன்றவற்றாலும் விக்கல் வரும்.

இதேவேளை, விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் விக்கல் வரும் என வேடிக்கையாக கூறுவார்கள். ஆனால் இது சரியான வாதம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. எனவே விக்கல் ஏன் வருகிறது, அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறிய முயற்சிப்போம்.

நீண்ட காலமாக உங்களுக்கு விக்கல் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, நீங்கள் ஒரு வைத்தியரை கலந்தாலோசிப்பது சிறந்ததாகும்.

விக்கல்களை நிறுத்த இந்த வழிகளை முயற்சி செய்யலாம் :

விக்கல்களை நிறுத்த, நீங்கள் சிறிது நேரம் மூச்சைப் பிடித்துக் கொள்வது பலன் தரும். சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது, உதரவிதானத்தில் உள்ள பிடிப்பை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் விக்கல் நிற்கிறது.
இது தவிர விக்கல் வரும் போதெல்லாம் குளிர்ந்த நீரை அருந்தலாம். ஏனெனில் நீங்கள் தண்ணீரை விழுங்கும் போது, ​​உதரவிதானம் சுருங்குவது, பிடிப்பை அகற்றுவது ஆகியவற்றில் உதவிடும்.
தொடர்ந்து விக்கல் பிரச்சனைகள் ஏற்பாட்டால், நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் அதை நிறுத்தலாம். இது விசித்திரமாகத் தோன்றலாம். என்றாலும் இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், உங்கள் நாக்கு ஒரு அழுத்தப் புள்ளி. உங்கள் நாக்கை நீட்டுவது உங்கள் தொண்டையின் தசைகளைத் தூண்டுகிறது.
இது தவிர, விக்கல்களை நிறுத்த சரியான இடத்தில் வசதியாக உட்கார வேண்டும். இதற்குப் பிறகு, முழங்கால்களை உங்கள் மார்புக்குக் கொண்டு வந்து இரண்டு நிமிடங்கள் அந்த நிலையில் வைக்கவும். உங்கள் முழங்கால்களை நீட்டுவது மார்பை அழுத்துகிறது, இது உதரவிதானத்தின் பிடிப்பை போக்கலாம்.

Related posts

முட்டை கெட்டுவிட்டதா? இல்லையா? என கண்டுபிடிக்கும் வழிமுறைகள் !!!

nathan

தெரிஞ்சிக்கங்க… கர்ப்ப காலத்தில் சீஸ் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்குமா?

nathan

டீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan

தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியமான உடல் நலத்திற்கு லெமன் டீ சாப்பிடுங்க!!

nathan

ப்ளூ டீ பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

சுவையான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட்

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan