[ad_1]
வாசகிகள் கைமணம்!!சோள கொழுக்கட்டை
தேவையானவை: சோளம்
– 200 கிராம், சின்ன வெங்காயம் – 5, நறுக்கிய கேரட், தோல் சீவி நறுக்கிய
உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி (சேர்த்து) – ஒரு கப், பச்சை மிளகாய் – 2,
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு, எண்ணெய், நெய் – தலா ஒரு
டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை: சோளத்தை
மிதமான தீயில் வறுத்து, நைஸாக அரைத்துக்கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை
மிளகாயை நறுக்கிக்கொள்ளவும். சோள மாவுடன் உப்பு, நெய் சேர்த்துப் பிசிறி,
தண்ணீர் தெளித்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கேரட்,
உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து
நன்றாக வதக்கவும். ஆவியில் வேகவைத்த சோள மாவை காய்கறிக் கலவையுடன் நன்கு
கலந்து, கொழுக்கட்டைகளாகப் பிடித்து மீண்டும் ஆவியில் வேகவிட்டு எடுத்து,
பரிமாறவும்.
புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது… சோளம்!
கீரைப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி – அரை கப், பாசிப்பருப்பு – கால் கப், பொடியாக நறுக்கிய ஏதாவது
ஒரு கீரை – ஒரு கப், பச்சை மிளகாய் – 2, மிளகு – சீரகப் பொடி – அரை
டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு –
தேவைக்கேற்ப.
செய்முறை: குக்கரில்
நெய் விட்டு, மிளகு – சீரகப் பொடி, கீறிய பச்சை மிளகாய், கீரை, மஞ்சள்தூள்
ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர்
விட்டு, கொதித்ததும் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறி,
குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்.
[ad_2]