வாழைப்பூவை வைத்து கூட்டு, பொரியல், வடை செய்து இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் வாழைப்பூ துவையல்
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ (ஆய்ந்த மடல்) – 20,
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு,
உளுந்தம்பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உப்பு – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
* வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
* பிறகு அந்த கடாயில் வாழைப்பூவைச் சேர்த்து வதக்கவும்.
* வறுத்த பொருட்கள் அனைத்து ஆறியதும் புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், உளுந்தம் பருப்பு, உப்பு, வாழைப்பூ சேர்த்து மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும்.
* சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் ரெடி.
குறிப்பு: சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். சுட்ட அப்பளம் சிறந்த காம்பினேஷன். வாழைப்பூ வயிற்றுப்புண்ணை குணமாக்கும்.