இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.
தென்னிந்திய உணவு வகை,
வட இந்திய உணவு வகை.
தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள்.
அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.
குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.
இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று.
இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம் நன்கு வெண்மையாகவும் காணப்படும்.
இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும்.
பணப்பயிர்களில் இதுவும் ஒன்று. உளுந்து மிகவும் சத்து வாய்ந்த ஒரு பொருளாகும். கிராமங்களில் பருவம் அடைந்த பெண்களுக்கு உளுந்து களி, நல்லெண்ணெய் கலந்த கருப்பு உளுந்து மாவு உட்பட உளுந்தில் செய்த பலகாரங்கள், பட்சணங்கள் அதிகம் பெரியவர்கள் செய்து கொடுப்பர்.
இதற்கு காரணம் உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துதான். பருவமடைந்த நேரத்தில் பெண்கள் உடல் சோர்வால் அவதிப்படுவர். உளுந்து உடலுக்கு ஊட்டம் கொடுத்து மனதையும் உடலையும் வலுவாக்கும் தன்மை உள்ளது.
Related posts
Click to comment