சிறிதளவு எண்ணெய்ப்பசைகூட உங்கள் சருமத்தில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். வயது வந்தவர்களுக்கு ஏற்படும் பருக்கள் பிரச்னை உங்களை வாட்டுகிறதென்றால், அவை எதனால் ஏற்படுகிறது என்றும் அதனை கட்டுப்படுத்து எப்படி என்றும், இதைப் படித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்
English | Translation |
Types of Acne
|
பருக்களின் வகை
|
பெரியவர்களுக்கு ஏற்படும் பருக்கள் பற்றி
பெரியவர்களுக்கு ஏற்படும் பருக்கள் புதிய விசயமா? இல்லவே இல்லை. உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் காணப்படும் பொதுவான சரும பிரச்னைதான் இது. இளம்வயது அல்லது பதின் பருவத்தில் தோன்றும் பருக்களை விட இது மிகவும் வலி நிறைந்தது. பெரியவர்களுக்கு பருக்கள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான காரணி, சருமத்தில் அதிகளவு எண்ணெய் படிவது தான். இதனால் சரும துவாரங்களில் அடைப்பு ஏற்பட்டு சருமத்தில் அழற்சி ஏற்படுகிறது.
ஆண்களை விட பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். லேசாக, மிதமாக அல்லது கடுமையாக என இதன் பாதிப்பு பல வடிவங்களில் இருக்கக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இருப்பதே இதன் காரணமாகும். இந்த ஹார்மோன் மாறுதல்கள் சருமத்தில் pH சமநிலையை பாதித்து சருமத்தில் எண்ணெய் சுரப்பினை (செபம்) அதிகரிக்கிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பருக்கள் மிகவும் பிரச்னைக்குரியவை. அவை மிக ஆழமாகவும் கட்டிகள் போன்ற தோற்றத்துடனும் இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் மென்மையாகவும் இருக்கும்.
சரி, சருமத்தை முன்பு போல பளிச்சிட வைக்க என்னதான் வழி? எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவது தான் இதற்கான ஒரே வழி. சில நேரங்களில் நாம் இதற்காகச் செய்யும் கை வைத்தியங்கள் சாதகமான பலனை விட பாதகமான பலனையே அதிகம் தரும். அதனால், இதற்கு நாம் ஏதேனும் இயற்கையான தீர்வை பயன்படுத்தினால் என்ன?
இயற்கைக்கு திரும்புதல்
பின்வரும் இந்த இயற்கைப் பொருட்கள் சருமத்தில் எண்ணெய் பிசுக்கை குறைக்க பெரிதும் உதவுகின்றன:
1. எலுமிச்சை: எலுமிச்சை சாறு இயற்கையிலேயே ஆன்டிபேக்டீரியல் குணம் கொண்டதாகும். அது அழுக்கினை நீக்கும் குணத்தை கொண்டிருப்பதால் அடைப்பட்ட சரும துவாரங்களை சுத்தம் செய்து இறந்த செல்களை நீக்குகிறது. மேலும், சரும செல்களின் வளர்ச்சியையும் தூண்டுகிறது.
2. ஃபுல்லர்’ஸ் எர்த்: ஃபுல்லர்’ஸ் எர்த் அல்லது முல்தானி மிட்டி நமது இந்திய வீடுகளுக்கு ஒன்றும் புதியதல்ல. அது சருமத்தில் உள்ள கூடுதலான எண்ணெய் பசையை நீக்கி சரும துவாரங்களில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கிறது. தொடர்ந்து இதனை பயன்படுத்தி வந்தால் சருமத்தை பொலிவாக்கி பருக்களால் ஏற்பட்ட வடுக்களையும் மங்கச் செய்கிறது.
3. வேம்பு: பெரியவர்களுக்கு ஏற்படும் பருக்களை சிறப்பாக சமாளிக்கும் திறன் கொண்டது வேம்பு. எனவே பருக்களுக்கு நீங்கள் இனி சுலபமாக விடை கொடுத்து விடலாம்! வேம்புவின் ஆன்டிபேக்டீரியல் குணங்கள் பருக்களை ஏற்படுத்தும் பேக்டீரியாக்களை கொல்கிறது. சருமத்துக்கு இதமளித்து பருக்களால் அழற்சியடைந்து ஏற்பட்ட கரும் திட்டுக்களையும் குணமாக்குகிறது.
வேம்பின் நற்குணங்கள் பற்றி சில கூடுதல் தகவல்கள்
பல தலைமுறைகளாக இந்திய குடும்பங்கள் பயன்படுத்தி பாதுகாத்து வரும் பாரம்பரிய ரகசியம் வேம்பு.
வேம்பின் அருமை பெருமைகளை பெரிதும் நம்பும் தாய்மார்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளனர். உண்ணும் உணவு முதல் குளிக்கும் நீர் வரையில் அதுவும் குறிப்பாக வெயில் காலத்தில் இதனை பயன்படுத்துபவர்கள் மிக அதிகம். அம்மாக்களின் நம்பிக்கையை போல Hamam-ம் 1931ம் ஆண்டு முதலாக, அனைவரின் நன்மதிப்பை பெற்ற பாரம்பரிய பொருளாக உள்ளது. 100 விழுக்காடு பரிசுத்தமான வேப்பெண்ணெய், கற்றாழை மற்றும் துளசி அடங்கிய Hamam நவீனம் மற்றும் பாரம்பரியத்தின் சரியான கலவையாகும். அது சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட சருமத்தை உறுதி செய்கிறது.
நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி அல்லது அதிக நேரத்தை வெளியில் செலவிட்டாலும் சரி, சருமத்துதிற்கு தேவையான பாதுகாப்பினை வழங்கத் தவறாதீர்கள்!