சிறு துண்டுகளாக நறுக்கிய ஒரு பீட்ரூட், இரண்டு கேரட், 50 கிராம் பட்டாணி, பொடியாக நறுக்கிய 50 கிராம் பீன்ஸ் ஆகியவற்றை, ஒன்றாகக் கலந்து உப்பு போட்டு வேக வைத்து எடுங்கள்.
தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, இந்த காய்களைப் போட்டு, பெருங்காயப் பொடி தூவி, கறிவேப்பிலையும், சிறிது தேங்காயையும் துருவிப் போட் டால், எந்தக் காயும் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதை விட இன்னொரு பயன் இதற்கு உள்ளது. பலரது வீட்டிலும் இது போன்ற காய்கள் தனித்தனியாக ஒவ்வொன்றாகக் கிடக்கும். அவற்றை “கடனே…’ என்று ஒட்டுமொத்தமாய் கூட்டு செய்து சுவையைக் கெடுத்து குட்டிச் சுவராக்கி மற்றவர் தலையில் கட்டுவதை, இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்.