90′ s கிட்ஸ் பலருக்கு தங்களது பள்ளி காலத்தில் மிகவும் பிடித்த உணவாக இருந்தது இந்த தேன் மிட்டாய் தான். இந்த தேன் மிட்டாய்க்காக செய்த அட்டூழியங்கள் அனைத்தும் கண்முன்னே வந்து போகலாம். இப்பொழுது சாப்பிட நினைத்தாலும், கடைகளில் இதனை பார்ப்பது அரிதாகவே இருக்கின்றது. அதனால் சுவையான தேன் மிட்டாயை உங்கள் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். எப்படி செய்வது என்று பாப்போம்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – அரை கப்,
உளுத்தம் பருப்பு – 2 கப்,
மைதா மாவு – அரை கப்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
சர்க்கரை – ஒன்றரை கப்
செய்முறை :
ஒரு அகலமான கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து பின் தண்ணீர் ஊற்றி சரியான பதத்திற்கு கொதிக்க வைக்க வேண்டும். உளுந்தை நன்றாக ஊற வைத்து அரைத்த கொண்டு, பின் அரைத்த உளுத்தம் பருப்பு மாவை மைதா மாவு,
மற்றும் அரிசி மாவு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும், கலந்து வாய்த்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் போட்டு பொரிந்து சரியான அளவு வெந்தவுடன் எடுத்து எண்ணெயை வடித்து எடுக்க வேண்டும்.
காய்ச்சி வைத்திருக்கும் சூடான சர்க்கரை பாகில் போட்டு அரை மணி நேரம் கழித்து தனியாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும். அனைவருக்கும் பிடித்த சுவையான தேன் மிட்டாய் ரெடி!!