குழந்தைகள் நிறைய வீடுகளில் வாழைப்பழங்களை சாப்பிட மாட்டார்கள். அதிலும் நாம் அதிக சத்து தரும் என்று நினைக்கிற ரஸ்தாலி, நேந்திரம் பழங்களை எல்லாம் கிட்டவே வரச் செய்யாமல் ஒதுக்கி தள்ளுவார்கள். அது மாதிரியான குழந்தைகளுக்கு இந்த தோசை செய்து கொடுங்க!
தேவையான பொருட்கள்
தோசை மாவு -1கப்
வாழைப்பழம் -1
நெய் -1டீஸ்பூன்
சர்க்கரை -1டேபிள்ஸ்பூன்
செய்முறை
வாழைப்பழத்தின் தோலை உரித்து விட்டு, வட்ட வடிவ துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
தோசைக்கல் சூடான உடன் தோசை ஊற்ற வேண்டும். உடனடியாக வாழைப்பழத் துண்டுகளை இடைவெளி இல்லாமல் தோசை மீது வைத்து லேசாக அழுத்தி விட வேண்டும். நெய்யை தோசையை சுற்றி விட வேண்டும். தோசை ஒரு புறம் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வெந்தவுடன் எடுக்க வேண்டும். தோசை சூடாக இருக்கும் போதே பொடித்த நாட்டுச் சர்க்கரையை மேலே தூவ வேண்டும். இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள எதுவும் தேவை இல்லை. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.