தேவையான பொருட்கள்
வெங்காயம் – 2
கடலை மாவு – 1/2 கப்
அரிசி மாவு – 1/4 கப்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஓமம் – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கேற்ப
ரிச் ஓட்டல் சுவையில் வெங்காய பஜ்ஜி செய்யனுமா? இந்த 4 பொருட்கள் இருந்தாலே போதும்! | Onion Bhaji Recipe
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி வட்டமாக வெட்டிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு போட்டு அதனுடன் ஓமம், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ரிச் ஓட்டல் சுவையில் வெங்காய பஜ்ஜி செய்யனுமா? இந்த 4 பொருட்கள் இருந்தாலே போதும்! | Onion Bhaji Recipe
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், அருமையான வெங்காய பஜ்ஜி தயார்.