தமிழர்களின் ஒவ்வொரு விஷசத்திலும் ரசம் இருக்கும். சாப்பிடும் போது சிறிது ரசம் சேர்த்துக் கொள்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
புளி ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பல வகைகளிலும், சுவைகளிலும் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.
இதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள மசாலாப் பொருட்கள் தான். பல ஆண்டுகளாலாக புற்றுநோய்க்கு ஆராச்சியாளர்கள் மருந்து தேடி கொண்டிருந்தனர்.
மருந்தே இல்லாமல் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் அற்புதமான உணவாக ரசம் இருக்கின்றது. ரசம் உட்கொண்டு வந்தால், புற்றுநோயின் தாக்கம் குறையும். இதற்கு முக்கிய காரணம், ரசத்தில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் மற்றும் மிளகு தான்.
இவையே புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
தினமும் ரசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.
வெளிநாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.
ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.
நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது.
அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.
கொத்துமல்லி ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.
உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.
மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது.
வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.
ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
ரசம் செய்ய தேவையான பொருட்கள்
புளி கரைசல் – 2
மேசைக் கரண்டி தக்காளி- 1
கறிவேப்பிலை – சிறிதளவு
கருப்பு மிளகு – 2 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் – அரை தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை
சிவப்பு மிளகாய், கருப்பு மிளகு, சீரகம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, சூடு ஆறியதும் மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
ஓர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய தக்காளி மற்றும் மீதமுள்ள கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்கு தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கவும்.
புளிக் கரைச்சலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, கடாயை மூடி வைத்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். அவ்வளவுதான் சூடான மிளகு ரசம் ரெடி! இறக்கியதும் அதன்மேல் கொத்தமல்லித் தழைகளைத் தூவி விடலாம்.
தேவைப்பட்டால், சிறிது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதிக நேரம் கொதிக்க வைக்கக்கூடாது.