கூந்தல் ஜீவனில்லாமல் முடி வளர்ச்சியும் நின்று போய் எப்போதும் அது ஒரு மைன்ஸாக சிலருக்கு இருக்கும். இதனால் சிலருக்கு எலிவால் போலும், குச்சி போலும் நீட்டிக் கொண்டிருக்கு. போதிய அளவு ஊட்டம் அளித்து, கூந்தல் வளர்ச்சியை தூண்ட வேண்டும்.
நன்றாக புரத உணவுகள் சாப்பிடுவதாலும் எண்ணெய், வெளிப்புற போஷாக்கு அளிப்பதாலும் உங்கள் கூந்தலின் அமைப்பை மாற்றலாம்.
அதில் ஒன்றுதான் நீங்கள் அறிந்திராத மயோனைஸ் குறிப்பு. மயோனைஸ் பொதுவாக உணவுகளை அலங்கரிப்பதற்காக தயாரிக்கப்பட்டாலும் அது கூந்தல் வளர்ச்சிக்கும் உபயோகிக்கலாம்.
மயோனைஸ் செய்வது எப்படி?
மயோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கருவினால் செய்யப்படுவது. முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக அடித்து அதில் சிறிது சிறிதாக எண்ணையை சேர்த்து கொண்டே நன்றாக அடித்தால் அவை க்ரீம் போல் ஆகிவிடும்.
அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது வினிகர் கலந்தால் மயோனைஸ் தயார்.
கூந்தலுக்கு உபயோகிக்கும் முறை :
தலையை ஈரப்படுத்துங்கள். பிறகு மயோனைஸை தலையின் வேர்க்கால்களிலிருந்து நுனி வரை தடவுங்கள்.
கூந்தலுக்கு உபயோகிக்கும் முறை :
மசாஜ் செய்யுங்கள். அதன் பிறகு ஒரு ஷவர் கேப்பினால் உங்கள் கூந்தலை மூடிவிடுங்கள். அல்லது ஒரு வெதுவெதுப்பான ஈர டர்க்கி துண்டால் தலை முடியை கட்டுங்கள்.
கூந்தலுக்கு உபயோகிக்கும் முறை :
20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்புவினால் அலசவும். மாதம் ஒருமுறை செய்தால் கூட போதுமானது. இது முடி உதிர்தலை கட்டுப்படுத்தி நன்கு வளரச் செய்யும்.
கூந்தலுக்கு உபயோகிக்கும் முறை :
இது வறண்ட கூந்தலுக்கு மிகவும் நல்லது. இதிலுள்ள புரொட்டின் மற்றும் லெசித்தின் கூந்தல் வளர்ச்சியை தூண்டும். ஈரப்பதத்தை அளிக்கிறது.