26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
27 1472286609 foot
கால்கள் பராமரிப்பு

மெத்தென்ற பாதம் கிடைக்க எளிமையான டிப்ஸ் !!

என்னதான் முகம் ராஜ குமாரியாக ஜொலித்தாலும், பாதத்தில் கரடுமுரடாக வெடிப்பு இருந்தால், அழகு எடுபடாது. அருவருப்பாய்தான் உள்ளுக்குள் நினைப்பார்கள். பாதங்கள் மென்மையான மெத்தென்று இருந்தால் தனி அழகை கொடுக்கும்.

பாதத்தில் வெடிப்பு மீண்டும் மீண்டும் வரக் கூடியது. இதனாலேயே சோர்ந்து போய் பெரும்பாலோனோர் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். ஏதாவது விசேஷம் என்றால் மட்டும் பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வார்கள். அது தவறு. தினமும் பராமரிக்க வேண்டும்.

அதிக குளிர்ந்த தரையென்றால் எளிதில் வெடிப்பு வரும். ஆதலால் பெரும்பாலும் சாக்ஸ் போட்டே வீட்டிலிருங்கள். வெடிப்பே வராது. அது தவிர சின்ன சின்ன குறிப்புகளை நீங்கள் உபயோகித்தால் வெடிப்பெ எட்டிப்பார்க்காதவாறு செய்துவிடலாம். எப்படி என தெரிந்து கொள்ளலாமா?

வெடிப்புகள் மறைய :
மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும். உருளைக்கிழங்கை காய வைத்து அதனை மாவு போன்று அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும். வெங்காயத்தை வதக்கி அரைத்து கால் பாதங்களில் தடவி வந்தால் கால் வெடிப்பு மறையும்.

பப்பாளி :
பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தை தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்த வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்பிலை :
வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

விளக்கெண்ணெய் :
விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும்.

வெடிப்பு வராமல் தடுக்க :
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.

வெடிப்பு வராமல் தடுக்க :
சுடு நீரில் சிறிது சமையல் சோடா எலுமிச்சை சாறு சிறிது ஷாம்பு கலந்து அதில் உங்கள் கால்களை அமிழ்த்துங்கள். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக பாதத்த்தை தேயுங்கள். இப்படி வாரம் இருமுறை செய்தால் வெடிப்பு வராது
27 1472286609 foot

Related posts

பாத வெடிப்பை மறைய வைக்கும் அருமையான குறிப்புகள் !

nathan

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி? : நீங்களும் ட்ரை பண்ணுங்க….!

nathan

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

கொலுசு அணிவதற்கான காரணங்கள்

nathan

பாதகம் வராமல் பாதங்களை பாதுகாக்கலாம்!

nathan

பாதங்களையும் கொஞ்சம் பாருங்க!

nathan

கால்களில் உள்ள சுருக்கங்ளை போக்க வேண்டுமா?

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

வேப்பிலை பயன்படுத்தி எப்படி குதிகால் வெடிப்பை குணப்படுத்த முடியும்?

nathan