பலாக்காய் குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது மற்றும் இது பித்தத்தை தணிக்கவல்லது, மூளைக்கு வலுவை தரும் இந்த பலாக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, காலிசியம், சோடியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. இதனை சமைத்து கூட்டு போல் சாப்பிடுவதால் குழந்தைகள் மற்றும் சத்துக்குறைவானவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும்.
தேவையானவை பொருட்கள்:
* நறுக்கிய பலாக்காய் – ஒரு கிண்ணம்
* காய்ச்சிய பால் – ஒரு கிண்ணம்
* காய்ந்த மிளகாய் – 2
* மிளகு – கால் தேக்கரண்டி
* உளுத்தம்பருப்பு – ஒரு தேக்கரண்டி
* தேங்காய் துருவல் – ஒரு மேஜைக்கரண்டி
* உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் தேவையான அளவு உப்பு சேர்த்து பலாக்காயை முக்கால் பதத்துக்கு வேகவைத்துக் கொள்ளவும்.
* மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு இவைகளை வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.
* பின்னர் அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் காயில் கொட்டவும்.
* இந்த கலவை நன்றாக கொதித்ததும், பால் சேர்க்கவும்.
* ஒரு கொதி வந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.