மனிதனின் வாழ்க்கை பல பருவங்களை கொண்டது. அதில் நாம் மிகவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களாகும் பருவத்தில் தான். ஏனெனில் ஒரு குழந்தையை பராமரிப்பது எளிதான காரியம் அல்ல. அதுவும் வீட்டில் பெரியவர்கள் இல்லாத கணவன் மனைவி மட்டும் இருக்கும் குடும்பம் என்றால், அந்த பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இங்கே புதிய பெற்றோர்களுக்கான சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
#1
உங்கள் குழந்தை பிறந்த நேரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நேரமாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு குழந்தை பராமரிப்பில் சில சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படலாம். இதனை மற்றவர்களிடம் கேட்பதில் தயக்கம் வேண்டாம். உங்களை போலவே உங்கள் உறவுகளுக்கும் குழந்தை பிறந்ததில் மகிழ்ச்சி இருக்கும். எனவே நிச்சயம் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
#2
முதல் முறை பெற்றோர்களானவர்களுக்கு பலரும் பல விதமான இயற்கை குறிப்புகளை வழங்குவார்கள். அனைவரது அறிவுரைகளுக்கு செவி சாயுங்கள். ஆனால் குழந்தைக்கு அவற்றை பயன்படுத்தும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். குழந்தை விஷயத்தில் சோதனை செய்து பார்ப்பது வேண்டாம்.
#3
நீங்கள் உங்களது பெற்றோர்களிடம் கேட்டு ஒரு அட்டவணையை தயாரித்து வைத்துக்கொள்வது அவசியம். அதில் டயப்பரை எவ்வளவு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்றுவது மற்றும் எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை பால் தருவது போன்றவை அட்டவணையில் இருக்க வேண்டியது அவசியம். அட்டவணைப்படி காலம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள்.
#4
முதல் முறை பெற்றோர்களானவர்கள் சில தவறுகளை செய்வது உண்டு. எனவே புதிதாக ஒரு விஷயத்தை செய்யும் முன் பெரியவர்களின் அறிவுரை அல்லது மருத்துவரின் அறிவுரைப்படி செய்வது அவசியம்.
#5
குழந்தையின் உணவு, மருத்துவம், படிப்பு ஆகியவற்றிற்கு எவ்வளவு செலவாகும் என்பதை மதிப்பிட்டு அதன்படி பட்ஜெட் போட்டு செலவு செய்வது முக்கியம்.
#6
உங்கள் குழந்தைகளை சுற்றுலா போன்ற வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும் முன்னர் அந்த இடம் உங்கள் குழந்தையின் உடல்நிலைக்கு உகந்ததா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும் ஒரு செக் லிஸ்ட் தயார் செய்து அனைத்து பொருட்களையும் மறக்காமல் எடுத்து செல்லுங்கள்.
#7
குழந்தையை தூக்குதல் மற்றும் தொடும் முன்பு கைகளை கட்டாயம் கழுவுவது அவசியம். குறிப்பாக சமையல் செய்து விட்டு கைகளை கழுவுவது அவசியம்.