23.4 C
Chennai
Wednesday, Dec 18, 2024
CrV4VPj
முகப் பராமரிப்பு

முகத்தில் சுருக்கத்தை போக்க என்ன செய்யலாம்?

வயது அதிகரிக்க, அதிகரிக்க முகத்தில் சுருக்கம் விழுவது சகஜம். ஆனால், இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை தருவதை யாரும் விரும்ப மாட்டார்கள்.
இந்த தோற்றத்துக்குக் காரணம் முகத்தை சரியாக பராமரிக்காததே ஆகும். ஆகவே அத்தகைய பிரச்சனை இல்லாமல், முகம் பொலிவோடும், முதுமைத் தோற்றத்தை தரும் சுருக்கம் இல்லாமலும் இருப்பதற்கு, உணவுகளை உண்பதோடு, அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க்குகளைப் போட்டு பராமரிக்க
வேண்டும். தரம் வாய்ந்த கிரீம்களை பயன்படுத்தினாலும் கூட ஓரளவுக்குத்தான் சுருகத்தை குறைக்க முடியுமே தவிர முற்றிலும் தவிர்க்க முடியாது. இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துவதனால் கிடைக்கும் பலன்களுக்கு பக்கவிளைவுகள் இருக்காது என்பதைவிட அந்த அழகே நிரந்தரம்.

நேச்சுரல் கிளன்ஸிங்

இயற்கையிலேயே நமக்குக் கிடைக்கும் கிளன்ஸிங் பொருட்களோடு வேறு எந்த செயற்கை கிரீம்களையும் ஒப்பிட முடியாது. செயற்கை கிரீம்களைப் பயன்படுத்தி
பக்க விளைவுகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்வதைவிட நேச்சுரலான பொருட்களே சிறந்த கிளன்ஸிங்காக செயல்படுகிறது. ஈசியாகக் கிடைக்கும் தேனும் பாலும் ஒரு சிறந்த கிளன்சிங் மருந்துகள். காய்ச்சாத பசும் பாலும் அரை ஸ்பூன் தேனும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தில் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கச்செய்து பாலில் உள்ள லேக்டிக் அமிலமானது முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கி இறந்த செல்களை வெளியே
அகற்றுகிறது. இதனால் முகம் பொலிவடைவதுடன் சுருக்கம் விழாமல் முகத்தை பாதுகாக்கும்

கிளன்சராக எலுமிச்சை

இயற்கையிலே எளிதாக கிடைக்கும் எலுமிச்சை சாறும் சர்க்கரையும் சிறந்த கிளன்சிங். இரண்டையும் ஒன்றாக கலந்து 10 நிமிடம் முகத்தில் ஊறவைத்து கழுவ
வேண்டும். சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலமானது சருமத்தில் உள்ள பிரச்சனைகளை நீக்குகிறது. எலுமிச்சையில் உள்ள விட்டமின் சி கொலஜின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் சருமத்தின் இளமையை பாதுகாக்ககிறது. சுருக்கத்தை போக்கும்

முட்டையின் வெள்ளைக் கரு :

இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து நன்றாக நுரை வரும் வரை ஒரு சிறிய கோப்பையில் அடைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் 20 நிமிடம் காயவைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வெள்ளைக்கரு முழுவதும் முகத்தில் இறுகுவதால் அதில் உள்ள புரோட்டீன் கொலாஜனை
அதிகரிக்கச் செய்து சருமத்திற்கு போசாக்கு அளிக்கிறது.

சமையலறைக்குள் ஒளிந்துள்ளது அழகு :

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் வாழைப்பழம் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதுமட்டுமின்றி சருமத்தையும் மென்மையாக்கும்.

* தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து, சருமத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், இதன் பலனை விரைவில் பெறலாம். இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தை இறுக்கமடையச் செய்வதோடு, சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்கிவிடும்.

* சருமத்தை இறுக்கமடையச் செய்வதில் கற்றாழை ஒரு சிறந்த அழகுப் பொருள். ஆகவே இதன் ஜெல்லை முகத்தை தடவி, மசாஜ் செய்து, ஊற வைத்து
கழுவினால், சருமம் இறுக்கமாவதோடு, எண்ணெய் பசையுடனும் இருக்கும். மேலும் இது சரும நோய்களையும் குணப்படுத்தும்.

* அவகேடோ பழமும் சரும பராமரிப்பில் ஒரு சிறந்த பொருள். அவகேடோ பழத்தை நன்கு மசித்து, அதில் சிறிது 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, நன்கு
கலந்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகத்தை பளிச்சென்றாக்கும் பீர் ஒரு முழு எலுமிச்சையுடன் அரை கிளாஸ் ரோஸ் வாட்டர் கலந்து அரை கிளாஸ் பீருடன் நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் காட்டன் பஞ்சில் நனைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.

இதை வாரம் 3 அல்லது 4 முறை தவறாமல் செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கி, சருமத்துக்கு அழகையும் பொலிவையும் தருகிறது. இதை இரவு முழுவதும்
முகத்தில் ஊறவைத்துவிட்டு காலை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் சிறந்த ரிசல்ட்டை பெற முடியும். உடலில் ஆன்டிஆக்ஸிடன்டின் அளவு
குறையும் போதுதான் உடல் சோர்வடைந்து, கண்களுக்கடியில் கருமை படியும். மேலும், முகம் பளபளப்பின்றி புத்துணர்வற்று காணப்படும். நாளடைவில் அதுவே சுருக்கமாக மாறும். எனவே பச்சைக்காய்கறிகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த உணவை உண்ணும்போது இழந்த இளமையைக்கூட திரும்பப் பெற முடியும். உடலும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.CrV4VPj

Related posts

கருப்பாக இருப்பவர்களுக்கு வீட்டில் செய்யக்கூடிய இயற்கை பியூட்டி டிப்ஸ்

nathan

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகள்…..

sangika

முகக் கரும்புள்ளிகள் போக்கும் எளிய 5 வழி

nathan

உங்களுக்கு தோல் சுருக்கங்களை இயற்கையான முறையில் நீங்கணுமா?இதோ ஈஸியான டிப்ஸ்.

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

முகம் பளிச்சிட சில டிப்ஸ்

nathan

இரண்டே நாளில் அழகாகலாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க தமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள்தான் காரணமாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

nathan