25.7 C
Chennai
Sunday, Dec 15, 2024
13 1468391180 10 face pack
முகப் பராமரிப்பு

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?அற்புதமான எளிய தீர்வு

ப்ளீச்சிங் செய்வதன் சருமத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பசை, கருமை போன்றவை நீக்கப்பட்டு, முகப்பொலிவு அதிகரிக்க செய்யும் ஓர் செயல். பலர் ப்ளீச்சிங் செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்வர். மேலும் ப்ளீச்சிங் சென்சிடிவ் சருமத்தினருக்கு சரியான தேர்வு அல்ல.

ஆனால் அத்தகையவர்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே ப்ளீச்சிங் செய்யலாம். வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வதால், சரும ஆரோக்கியம் மேம்பட்டு, சரும பிரச்சனைகள் வருவது குறையும்.

சரி, இப்போது சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ப்ளீச்சிங் #1 எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #2 சந்தனம், எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ப்ளீச்சிங் #3 ஆரஞ்சு தோல் மற்றும் பால் ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #4 தேன் மற்றும் பாதாம் 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #5 வெள்ளரிக்காய், கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #6 முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #7 எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் 2 டேபிள் ஸ்யூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். பின் சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

ப்ளீச்சிங் #8 தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பன் தக்காளி சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழுத்து கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #9 வெள்ளை வினிகர் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகருடன் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ப்ளீச்சிங் #10 ப்ளீச்சிங் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அம்மோனியா 1 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன், 1/2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1/2 டீஸ்பூன் அம்மோனியா சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.13 1468391180 10 face pack

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகச் சுருக்கங்களை நீக்கும் உருளைக்கிழங்கு

nathan

உடலில் ஏற்பட்ட தழும்பை மறைய வைக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தெரிஞ்சிக்கங்க… இயற்கையான முறையில் பப்பாளி ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி…?

nathan

முகம், சருமப் பளபளப்புக்கு ஜப்பானியர்கள் சுட்டிக்காட்டும் 7 எளிய வழிமுறைகள்!

nathan

உடலில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் எப்படி கட்டுப்படுத்தலாம்?

nathan

இதோ எளிய நிவாரணம்! இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

nathan

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா

nathan

சருமம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க காரட்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

sangika

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan