28.2 C
Chennai
Monday, Dec 30, 2024
முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!
முகப் பராமரிப்பு

முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்தும் போது நாம் செய்யும் தவறுகள்!!!

சருமத்தைப் பராமரிக்க காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் அழகு பராமரிப்புப் பொருள் தான் சமையலறையில் இருக்கும் மஞ்சள் தூள். அக்கால பெண்கள் தங்களின் முகத்திற்கு அன்றாடம் மஞ்சள் தேய்த்து குளித்து வந்ததால் தான், அவர்களுக்கு எவ்வித சரும பிரச்சனைகளும் வந்ததில்லை.

இதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கிருமிநாசினி பண்புகள் தாள். அதுமட்டுமின்றி, இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தான், இது பல சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்போரின் எண்ணிக்கை குறைவு. மாறாக மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் தான் போடுகிறார்கள்.

என்ன தான் இருந்தாலும் இக்காலத்தில் மஞ்சளை முகத்திற்குப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை பெண்கள் செய்கின்றனர். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தேவையில்லாத பொருட்களுடன் சேர்ப்பது

மஞ்சள் மிகவும் சக்தி வாய்ந்த பொருள். அதன் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

நீண்ட நேரம் கூடாது

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும்.

குளிர்ந்த நீர்

மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

கழுத்துப் பகுதியை தவிர்ப்பது

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும்.

தண்ணீர் தான் சிறந்தது

எத்தனைப் பொருட்களைக் கொண்டு மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தினாலும் நீரைக் கொண்டு பயன்படுத்துவதற்கு ஈடாகாது. ஏனெனில் நீரைக் கொண்டு பயன்படுத்தும் போது தான், உண்மையிலேயே மஞ்சளின் முழு நன்மையையும் பெற முடியும்.

சோப்பைப் பயன்படுத்தக்கூடாது

முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் சோப்பானது கஷ்டப்பட்டு முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும். எனவே முதலில் அதைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

பெண்களே உங்க சருமம் அதிகமா வறட்சி அடையுதா?

nathan

என்ன செஞ்சாலும் முகத்தில் இருக்கும் குழிகள் மறைய மாட்டீங்குதா?

nathan

15 நிமிடத்தில் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை நீக்க வேண்டுமா?

nathan

முகத்தில் அசிங்கமாக இருக்கும் சொரசொரப்பைப் போக்க வேண்டுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா புளியை பயன்படுத்தி எப்படி அழகாவது.?

nathan

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

nathan

உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற தினமும் இத செய்யுங்கள்!…

sangika

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

சூப்பர் டிப்ஸ்! சரும பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு தரும் வாழைப்பழம்!

nathan