அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

பார்ட்டிக்கான ஷாம்பெயின் ஃபேஷியல்

ld962*பாம்பு விஷம், மீன் முட்டை, நத்தை வெளியேற்றும் வழுவழுப்பு, ஒயின்… இவற்றில் எல்லாம் செய்யப்படுகிற ஃபேஷியல் இப்போது ரொம்பவே பிரபலம். அந்த வரிசையில் லேட்டஸ்ட் ஷாம்பெயின் ஃபேஷியல்!பெரிய இடத்து பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்றால் அங்கே கட்டாயம் ஷாம்பெயின்இருக்கும். அப்போதுதான் பார்ட்டிகளை கட்டும். அந்த ஷாம்பெயின் இப்போது அழகு சிகிச்சைக்கு வந்திருக்கிறது.

*யெஸ், ஷாம்பெயின் உபயோகித்துச் செய்யப்படுகிற ஃபேஷியல் மற்றும் உடல் மசாஜுகள் அழகுத் துறையில் ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட்! ‘‘மிகக் குறைஞ்ச அளவு ஷாம்பெயின் குடிக்கிறது இதயத்துக்கும், மூளைக்கும் நல்லதுனு சொல்றதுண்டு. ஷாம்பெயினும் ஒரு விதமான ஒயின்தான்.

*ஃபிரான்ஸ் நாட்ல ஷாம்பெயின்-னு சொல்லப்படற ஒருவித உயர் தர திராட்சைகளைக் கொண்டு தயாராகிற லைட்டான, போதை தராத ஒயின் தயாராகுது.இதோட இன்னொரு பெயர் ‘டெவில்ஸ் ஒயின்’. பாட்டிலை திறக்கறப்பவே பெரிய சத்தம் கிளம்பறதால அப்படியோர் பெயர்.

*ஷாம்பெயினை உபயோகிச்சு ஃபேஷியல் பண்றப்ப, சருமத்தோட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, மேடும், பள்ளமுமா இருக்கிற சருமம் சரியாகும். சரும நிறமும் கூடும்’’ என்கிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.எல்லா வயதினருக்கும், எல்லா வகையான சருமத்துக்கும் ஏற்றது இந்த ஷாம் பெயின் ஃபேஷியல் என்பது இன்னொரு சிறப்பம்சம்.

*‘‘சருமத்தை சுத்தப்படுத்த கிளென்சர்லேர்ந்து, மசாஜ் கிரீம், ஸ்க்ரப், மாஸ்க்னு எல்லாத்துலயும் ஒரிஜினல் ஷாம்பெயின் கலந்திருக்கும். இள வயதுப் பெண்கள்,ஸ்க்ரப்பை மட்டும் தவிர்த்துட்டு, மத்ததை உபயோகிக்கலாம். அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்களை விரட்டும். கை, கால்,கழுத்துனு கருத்துப் போன இடங்கள்ல உபயோகிச்சா, சருமம் சாதாரண நிறத்துக்குத் திரும்பும்.

*முதுமையைத் தள்ளிப் போட உதவறதால, வயதான பெண்களுக்கும் ஏற்றது. ரொம்ப வறண்டு, தடித்துப் போன சருமத்தையும் மிருதுவாக்கும். வெயிலால உண்டான பாதிப்புகளைப் போக்கும்.கல்யாணத்துக்கு முன்னாடி இந்த ஃபேஷியலை செய்துக்கிறது இப்ப மணப்பெண்கள் மத்தில பிரபலமா இருக்கு. முரட்டு சருமத்தை மிருதுவாக்கறதால,ஆண்களும் செய்துக்கலாம்.

*கொஞ்சமும் அலர்ஜி ஏற்படுத்தாத அழகு சிகிச்சை இது…’’ ஷாம்பெயின் ஃபேஷியலின் நன்மைகளை அடுக்கியவாறே,ஒரு பெண்ணுக்கு அதைச் செய்து முடித்தார் வசுந்தரா.மேக்கப் போட்ட மாதிரி அவரது முகத்தில் அப்படியொரு வசீகரம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button