மிளகு ஓர் சிறந்த மூலிகை மருந்து ஆகும். சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது.
இதில் பல மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது. நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
இதனை தேனுடன் கலந்து சாப்பிடுவது இன்னும் பல நன்மைளை தரும். அந்தவகையில் மிளகுத் தூளில் தேன் கலந்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் இங்கே காண்போம்.
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்குமானால், இரவு தூங்கும் முன் ஒரு ஸ்பூன் தேனில் 1/2 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து கலந்து சாப்பிடுங்கள். இப்படி சாப்பிட்டு தூங்குவதால், உடலினுள் சென்ற மிளகுத் தூளும், தேனும், சளியை திறம்பட கரைத்து வெளியேற்றும்.
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்களானால், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சிக்க வேண்டியது அவசியம். அதற்கு மிளகு நீரைக் குடிக்கலாம். அதற்கு ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து, பின் அதில் மிளகை சேர்த்து வறுத்து, பின் நீரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கி இந்த நீரை ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் குடிக்கலாம்.
சளியின் காரணமாக அஜீரண கோளாறால் அவதிப்பட்டு வந்தால், மிளகுத் தூளை தேனுடன் உட்கொள்ளுங்கள். இதனால் வாய்வுத் தொல்லை, அசிடிட்டி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை மிளகு குறைக்க உதவும். இதனால் இதய நோய்களின் அபாயம் குறையும். அதற்கு மிளகை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடிக்க வேண்டும்.
மிளகில் உள்ள உட்பொருட்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. ஆகவே தினமும் மிளகை தேனுடன் சாப்பிட்டு, உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.