மாலையில் பள்ளியில் இருந்து பசியோடு வரும் குழந்தைகளுக்கு சூப்பரான எளிய முறையில் செய்யக்கூடிய சேமியா கிச்சடி செய்து கொடுக்கலாம்.
மாலை நேர டிபன் சேமியா கிச்சடி
தேவையான பொருட்கள்
சேமியா – 2 கப்
பெரிய வெங்காயம் – 2
கேரட் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறிய துண்டு
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து
கடுகு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
உளுந்து – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 மேஜைக் கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
* சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
* அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.
* அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
* சேமியா கிச்சடி ரெடி.