மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள்.ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும். மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம் வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது.அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம். மனஅழுத்தம் ஏற்படாமல் இருக்க தினமும் தியானம் செய்து வரலாம். இதனால் உங்கள் மனதும், உடலும் ஆரோக்கியம் அடையும். வேலை மாற்றம் அதாவது பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் அதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும்.
ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.