பெண்களுக்கு அவர்களது வாழ்நாளில் அரைவாசி இந்த மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வுக் காண்பதிலேயே போய்விடும். “என்ன செய்ய எங்களது பிறவி பயன் அப்படி…” என்று நொந்துக் கொள்ளும் பெண்கள் நமது வீட்டிலும் இருக்கின்றனர்.
கொடுமை என்பது, வலிமிகுந்த ஒன்றில் பிரச்சனை எழுவது தான். அதுதான் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் சில கோளாறுகள். அதிகப்படியான இரத்தப்போக்கு, இரத்தப் போக்கே ஏற்படாமல் இருப்பது, வெள்ளை வெளிப்படுதல் என பல்வேறு பிரச்சனைகளை பெண்கள் மாதவிடாய் காலங்களில் எதிர்கொள்கின்றனர்.
ஆண்களுக்கு, அவர்களுக்கு ஏதோ வலி ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும் ஆனால், அது எவ்வாறானது என்று தெரிய வாய்ப்புகள் இல்லை. ஆனால், நீங்கள் ஆணாக இருந்தால், இதைப் படித்து உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் கூட எடுத்துக் கூறலாம். ஏனெனில், பெண்களது சில அன்றாட பழக்கங்கள் கூட அவர்களது மாதவிடாயை பாதிக்கின்றது…..
மிகுந்த மன அழுத்தம்
நமது தமிழ்நாட்டு பெண்கள் பிறக்கும் போது வரமாக பெற்று வந்தது இந்த மன அழுத்தம். நடிப்பு என்று தெரிந்தும் கூட சீரியலில் வரும் கதாப்பதிரங்களுக்காக வருத்தப்படுவார்கள். இதுப் போன்று தொட்டதற்கெல்லாம் மனம் வருந்தும் மனோபாவம் உடையவர்களுக்கு மாதாவிடாய் சுழற்சிகளில் பாதிப்பு ஏற்படுகிறதாம்.
உடல்பருமன்
தாறுமாறாக உடல் எடையை ஏற்றுபவர்களுக்கு, மாதவிடாய் காலங்களில் பிரச்சனைகள் எழுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக இது நாட்கள் தள்ளி போகும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றது. எனவே, திடீர் என்று உடல் எடையை கூட்டுபவர்கள் கவனமாக இருங்கள்.
சரியான உடற்பயிற்சி
செய்யாதது முதலில் எல்லாம் நம் வீட்டு பெண்கள், வீடு துடைப்பது, துணி துவைப்பது, மாவாட்டுவது என உடற்பயிற்சிக்கு பதிலாக கடின வேலைகள் செய்து வந்தனர். அதனால், அவர்களுக்கு எந்த குறைபாடும் இன்றி இருந்தனர். ஆனால், நவீன இயந்திரங்கள் அவர்களது உழைப்பை குறைத்து, உடல்நலப் பிரச்சனைகளை அதிகரிக்க செய்துவிட்டது.
மது பழக்கம்
“அட நம்ம ஊரு பொண்ணுக அதெல்லா சாப்பிடாது கண்ணு..” என்று உச்சுக் கொட்ட வேண்டாம். ஐ.டி. பெண்கள் பப்புகளில் ஐட்டம் டான்ஸ் ஆடியப்படியே மது அருந்துகின்றனர். ப்ளீஸ், அதைக் குடிக்க வேண்டாம், ஏனெனில், பெண்களின் மாதவிடாய் சுழற்சியை அது சீர்குலைக்கின்றது.
நேரம் மாறி வேலைப் பார்ப்பவர்கள்
ஐடி துறைகளில் ஷிப்ட் மாறி, மாறி வேலை செய்பவர்கள் மாதவிடாய் சுழற்சிகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் ஓர் ஆய்வில், இவ்வாறு வேலை செய்யும் பெண்களில் 33% பேருக்கு நாட்கள் தள்ளி போவதாய் கூறப்பாட்டிருக்கிறது.
தீர்வு
தொடார்ந்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் நாட்கள் தள்ளி சென்றாலோ, இரத்தப் போக்கில் இடையூறுகள் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். தைராயிடுப் பிரச்சனை இருந்தால் கூட இவ்வாறு ஆகலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.