13 neem leaves 11 600
ஆரோக்கியம்உடல் பயிற்சி

மாதவிடாயின் போது செய்யக்கூடிய 6 சிறந்த உடற்பயிற்சிகள்..!

மாதவிடாய் என்றாலே பெண்கள் முகம் சுழிக்கும் ஒரு காலமாகும். அப்படிப்பட்ட நேரத்தில் ஏற்படும் உடல் வலியும் இரத்த போக்கும் அவர்களை எரிச்சலடைய செய்யும். இதனால் பல பேர் இந்த நேரத்தில் உடலை வருத்தாமல் ஓய்வில் தான் இருப்பார்கள். ஆனால் வேலை செய்து பழக்கப்பட்ட பெண்களும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வரும் பெண்களுக்கு இது இடையூறாக இருக்காதா? இருக்கும் என்று தான் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை. இதை காரணமாக காட்டி, உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தை நீங்கள் தள்ளி போட தேவையில்லை. அதனால் உடற்பயிற்சியிலும் கூட ஈடுபடலாம்.

மாதவிடாயின் போது உடற்பயிற்சியில் ஈடுபடுவதை பற்றி, பல ஆய்வுகள், பல தகவல்களை அளித்துக் கொண்டு தான் வருகிறது. அது நன்மையை விளைவிக்கும் என்று சில ஆய்வுகள் கூறிய போதும், அது தீமையை விளைவிக்கும் என்று இன்னும் சில ஆய்வுகள் கூறுகிறது. அதனால் காயங்களும் உண்டாகும் என்றும் சில ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், மாதவிடாயின் போது, நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய உண்மையான விதிமுறை ஒன்று மட்டும் தான்: உங்கள் மனது சொல்வதை கேளுங்கள்.

மாதவிடாயின் போது தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்க்கும் வல்லுனர்கள் கூட, நடை கொடுத்தால் ஆபத்து ஏற்படாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். அதனால் சன்ஸ்க்ரீன் தடவிக் கொண்டு ரோட்டை நோக்கி நடக்கத் தொடங்குங்கள். வெறுமனே நடை கொடுத்தால் மட்டும் கலோரிகள் குறைவதில்லை. இருப்பினும் உடற்பயிற்சி செய்தோம் என்ற திருப்தியை பெறுவீர்கள். குறிப்பிட்ட அளவிலான கலோரிகள் குறைய வேண்டுமே என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள்.

உங்களுக்கு ஜாக்கிங் செய்ய வேண்டும் என்று தோன்றினால் ஓடுங்கள். தீவிர இதய பயிற்சியில் ஈடுபடும் போது உங்கள் உடலில் இருந்து எண்டார்ஃபின்ஸ் சுரக்கும். மாதவிடாய் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது தீர்வாக அமையும். ஓடுவதற்கு முன்பும் பின்னும் அதிகளவில் தண்ணீர் குடித்து நீர்ச்சத்துடன் இருங்கள். மாதவிடாய் காலத்தில் உங்கள் நீர்ச்சத்து எளிதில் குறைந்து விடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது உண்மையோ பொய்யோ, பாதுகாப்பாக இருப்பது நல்லது தானே. அதனால் தண்ணீர் குடியுங்கள்.

யோகா என்பது பல வகைகளை கொண்டுள்ளது. உங்கள் திறன் அளவிற்கு தோதாக அமையும் ஆசனங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மருத்துவ ரீதியாக ஆபத்து இல்லை என்றாலும் கூட, மாதவிடாய் காலத்தில் தலைகீழாக செய்யும் ஆசனங்களை தேர்ந்தெடுக்காதீர்கள். எளிய ஆசனங்கள் போதவில்லை என்றால், கடவுள் அமர்ந்திருக்கும் தோரனையை கொண்ட ஆசனங்களை நீங்கள் செய்யலாம்.

மாதவிடாயின் போது, சில நேரம் பைத்தியகாரத்தனமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும். அதில் ஒன்று தான் ஏரோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடுவது. அது உங்களை லேசாக வைத்திருக்கும். மேலும் ஏரோபிக்ஸ் வகுப்புகள் குறைந்த அழுத்தம் கொண்ட சுற்றுச் சூழலில் நடைபெறுவது கூடுதல் குஷியை ஏற்படுத்தும்.

நடனம் செய்வது பாரம்பரிய முறைப்படி உடற்பயிற்சி ஆகாது. ஆனால் உங்கள் இதயத் துடிப்பை அதிகரித்து கொஞ்சம் கலோரிகளை எரிக்கும். இது உடற்பயிற்சியை போல் இல்லாததால் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் நடனம் புரிவதற்கு கொஞ்சம் ஊக்கமும் உங்கள் மீது நம்பிக்கையும் இருந்தாலே போதுமானது. சாயந்திர வேளையிலே நடனம் புரிந்தால், உங்களை சந்தோஷத்தை அதிகரித்து மிகச் சிறந்த எண்ணத்தை உண்டாக்கும்.

மாதவிடாய் காலத்தில் வீட்டில் இருந்த படியே மனதுக்கு பிடித்த படங்களை பாருங்கள். தொலைகாட்சி பார்க்கும் நேரத்தில், விளம்பர இடைவேளைகளில், பலகையை போல் படுத்துக் கொள்ளுங்கள். தரையில் படுத்துக் கொள்ளுங்கள். உங்கள் கைகள் மற்றும் முழங்கையை நெஞ்சின் கீழ் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலை முழங்கை மற்றும் பாதமுனையின் உதவியை கொண்டு உயர்த்திடுங்கள். இது சற்று தீவிரமான உடற்பயிற்சியே. ஒவ்வொரு விளம்பர இடைவேளையின் போதும் இதனை செய்திடுங்கள். அதே போல் விளம்பர இடைவேளை முடியும் வரையில் இதனை தொடர்ந்து செய்யுங்கள்.

உங்கள் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்ளாமல் இருக்க மாதவிடாயை ஒரு காரணமாக பயன்படுத்தாதீர்கள். இருப்பினும் உங்கள் உடல் சொல்வது கேளுங்கள். அது எவ்வளவு தூரம் ஒத்துழைப்பு தருகிறதோ அந்தளவு உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். மேற்கூறிய பயிற்சிகளை முயற்சி செய்து தான் பாருங்கள்

Related posts

செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!!

sangika

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

தசைகளை வலிமையாக்கும் உடற்பயிற்சிகள்

nathan

டைனமிக் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்

nathan

பாலுடன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் நல்லதா? கேட்டதா?

sangika

சூப்பர் டிப்ஸ்.. பிரயாணத்தின் போது வாந்தியை நிறுத்த !!!

nathan

ஆண்கள் எந்த வயதில் எந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்

nathan

பெண்களை சித்திரவதை செய்யும் சில உடல் நல குறைவுகள்…

sangika

மன்னிக்கும் மனப்பான்மை டென்ஷனை போக்கும்

nathan