மாதவிடாய் பொதுவாக பெண்களுக்கு ஒரு சங்கடமான நிலை.இது மாதவிடாய் காலத்தில் அடிக்கடி வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படலாம்.
இந்த கடுமையான வலி மருத்துவத்தில் டிஸ்மெனோரியா என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு பொதுவான நிலை.
இதை குறைக்க நீங்கள் கடையில் கிடைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.சில இயற்கை வழிகள் உள்ளன.அதனால் அவை என்னவென்று பார்ப்போம்.
புதினா இலைச் சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் சீராகும்.
மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுப் பிடிப்பு நீங்கஆவாரம் பூவின் கஷாயம் காய்ச்சி குடித்து வர எப்போதும் வயிற்று வலியே வராது.அதன் பிறகு அத்திப்பழத்தை தேனில் குழைத்து சாப்பிடலாம்.
பலருக்கு மாதவிடாய் சிறிதளவே மட்டுமே வரும்.அவர்கள் சுண்ணாம்பு மற்றும் வெற்றிலையை கலந்து மோர் அருந்தினால் மாதவிடாய் சரியான முறையில் ஏற்படும்.
மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வு அதிகம் என்பதால் கோதுமையை கஞ்சி போல் செய்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் வெள்ளைப்படுதல் குறைகிறது, மேலும் சிலர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் துர்நாற்றம் பற்றி கவலைப்படுகிறார்கள். இதை தடுக்க, இந்த நேரத்தில் முட்டை மற்றும் இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, அதிக அளவு பழச்சாறுகளை உட்கொள்வது உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் வலிமையையும் சேர்க்கும்.