23.7 C
Chennai
Wednesday, Dec 18, 2024
25
சைவம்

மஷ்ரூம் ரெட் கறி

தேவையானவை: மஷ்ரூம் – 100 கிராம், பேபிகார்ன் அல்லது பனீர் – 50 கிராம், காய்ந்த மிளகாய் – 10, வெங்காயம் – 2, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 10 பல், தேங்காய்ப் பால் – 2 கப், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி – பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.

இதை. சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
25

Related posts

பனீர் 65

nathan

பக்கோடா குழம்பு

nathan

கொத்தவரங்காய் பொரியல்

nathan

முருங்கை பூ பொரியல்

nathan

வெஜிடேபிள் தம் பிரியாணி

nathan

கீரை தயிர்க் கூட்டு

nathan

பேபி உருளைக்கிழங்கு கறி

nathan

கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி

nathan

பரோட்டா!

nathan