26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
How To Use Curry Leaves For Hair Growth
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

மயக்கும் கூந்தலுக்கு… சில எளிய வழிகள்,நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

நீண்ட கூந்தலுக்கான ரகசியம்

தேவையானவை :  சீயக்காய்  ஒரு கிலோ, செம்பருத்திப்பூ 50, பூலாங்கிழங்கு  100 கிராம், காயவைத்த எலுமிச்சைத் தோல்  25, காயவைத்த நெல்லிக்காய்  50, பாசிப்பருப்பு கால் கிலோ, மரிக்கொழுந்துக் குச்சிகள் 20, கரிசலாங்கண்ணி இலை   3 கப்.

செய்முறை:  இவற்றை வெயிலில் காய வைத்து மில்லில்கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து, அரைத்த சீயக்காய்த்தூளை வெறும் தண்ணீரில் மட்டும் கலந்து தலைக்குத் தேய்த்து அலசுங்கள்.

p92

பலன்கள்:  பூலான்கிழங்கு, ஷாம்பு தேய்ப்பதன் பலனைத்தரும், எலுமிச்சையால் பொடுகு நீங்கும், பாசிப்பருப்பு, மரிக்கொழுந்து கூந்தல் வாசத்தை மேம்படுத்தும், கரிசலாங்கண்ணி முடியைக் கருப்பாக்கும். கூந்தல் கருகருவெனச் செழிப்பாகவும் வாசனையாகவும் இருக்கும்.

dot  நல்லெண்ணெய் உடல் சூட்டைக் குறைப்பதுடன் முடியின் பொலிவுக்கும் உதவும். இயற்கையான சாயத்திற்கும் குளிர்ச்சிக்கும் மருதாணி மிகவும் நல்லது. தலைக்குக் குளிக்கும் போது, உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
dot  கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து ,வடைகளாகத் தட்டி, நிழலில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைத் தினமும் தலையில் தடவிவந்தால், முடி உதிர்வது குறையும். கருமையாக வளரத் தொடங்கும்.
dot  வாரம் ஒரு முறை நெல்லிமுள்ளியை தயிரில் ஊறவைத்து அரைத்து, தலையில் பேக் போட்டு 10 நிமிடங்கள் கழித்து அலசலாம். இதனால் உடல் குளிர்ச்சியடைந்து மன அழுத்தம் நீங்கி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
dot  வசம்பை தீயில் சுட்டு, காய்ச்சிய எண்ணெயில்போட்டு, தடவிவந்தால் பேன், பொடுகு வராது.
dot  உடல் சூடு அதிகம் இருந்தால் முடி உதிர்வதுடன் வளர்ச்சியும் கடுமையாகப் பாதிக்கும். கூடவே,  கண் எரிச்சலும், உடல் சோர்வும் இருக்கும்.
dot  பஞ்சகல்பம், உடல் சூட்டினைப் போக்கும். கடுக்காய், நெல்லிக்காய், வேப்பங்கொட்டை மூன்றையும் தலா 100 கிராம் எடுத்து, இதனுடன் வெள்ளை மிளகு, கஸ்தூரி மஞ்சள் தலா 10 கிராம் சேர்த்து, இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் பால் சேர்த்து அரைத்து, அதைத் தலையில் போட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து அலசலாம்.

கருகரு கூந்தலுக்கு

dot  பலா இலை, செம்பருத்தி, நெல்லி முள்ளி, கறிவேப்பிலை நான்கையும் சம அளவு எடுத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சிவைத்துக்கொண்டு, தினமும் தேய்த்துவர, செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
dot  கருநீலத் திராட்சையின் தோலை நீக்கி உலரவைத்து, பொடித்துக்கொள்ளவும்.  இதனுடன் வெந்தயத்தூள், கடலை மாவைக் கலந்து தலைக்கு தேய்த்துக் குளியுங்கள்.  தூசுகள் நீங்கி, கூந்தல் கருமையாக மாறும்.
dot  100 கிராம் ஆவாரம் பூ, வெந்தயம் 100 கிராம், பயத்தம் பருப்பு  அரைக் கிலோ மூன்றையும் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள்.  இந்த பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலையை அலசிவர, கருகருவெனக் கூந்தல் பிரகாசிக்கும்

Related posts

கோடைக் காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நீங்கள் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்…

sangika

சில டிப்ஸ் செம்பட்டை முடியினை கருமையாக்க

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை சூப்

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

ஹேர் கலரின் வண்ணத்தை தரும் பிபிடியின் அளவு சற்று அதிகமானால் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது

nathan

நரை முடியைப் போக்கி, முடியின் அடர்த்தியை அதிகரிக்க வெங்காயத்தை எப்படி பயன்படுத்துவது?

nathan

‘இந்த’ இரண்டு டீயில் உங்க தலைமுடியை அலசுனீங்கனா…நீளமா வளருமாம் தெரியுமா?

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan